Skip to main content

Posts

Showing posts from April, 2012

Fall - its sequel.

ஏப்ரல் 10, 2012 செவ்வாய்க்கிழமை தெருவில் திடீரென விழுந்ததையும் ஸ்வரம் ஹாஸ்பிடலில் ஒருநாள் இருந்ததையும் “ALL NORMAL, ஒன்றும் இல்லை” என டாக்டர்கள் சொன்னதையும் முன்பே எழுதினேன்.11-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். 12-ஆம் தேதி காலை CGHS சென்றோம். டெஸ்ட் ரிசல்ட்டுகளை பரிசீலித்து விட்டு, “ஒன்றும் இல்லை” என இந்த டாக்டரும் (டாக்டர் பார்த்தஸாரதி) சொன்னார். Aspirin Tablet STROMIX கொடுத்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) டாக்டர் மாதவனிடம் சென்று காண்பித்தோம். அவரும் ஒன்றுமில்லை எனக் கூறினார். ஒரு CT Scan of Brain (plain) எடுத்து வரும்படி சொன்னார். மீண்டும் CGHS இந்திராநகர் 23ஆம் தேதி சென்று, அந்த டாக்டர் மூலமாக scanக்கு PRECISON DIAGONOSTIC LAB, MG ROADற்கு சீட்டு வாங்கிவந்தோம். CGHS மூலமாக் சென்றால் எல்லாம் இலவசம் - சுமார் 3300.00 ரூ மிச்சம் ! ஏப்ரல் 25, 2012 புதன்கிழமை காலை 10 மணி சுமாருக்கு காரில் விஜயாவும் நானும் PRECISION Labற்கு சென்றோம்; அரை மணி கழித்து என்னை Scan அறைக்கு அழைத்தனர். படுக்க வைத்து BRAIN SCAN பண்ணினார்கள். 10 நிமிஷத்தில் முடிந்தது. 11-45க்கு காரில் வீடு திரும்பினோம்.

Fall On The Road

10 ஏப்ரல் 2012 செவ்வாய்க்கிழமை. அன்றையப் பொழுது வழக்கம்போல விடிந்தது. காலை 4-15க்கு எழுந்து, குளித்து, பாராயணங்கள் படித்து, 6-30க்கு பொதிகை டீவியில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஸ்ரீராமாயணம் உபன்யாஸம் கேட்டேன். காலை 7-30க்கு, விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போது காய்கறி வாங்க பைகள் எடுத்துக் கொண்டு, திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் கிளம்பினேன். காய்களும் வாங்கினேன். திரும்பும் போது மார்க்கெட் வாசலில் நுங்கும் வாங்கினேன். வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடக்க ஆரம்பித்ததுதான் தெரியும் - அடுத்து நான் கண் விழிக்கும் போது ஒரு ஹாஸ்பிடலில் இருந்தேன், கூடவே விஜயாவும், அர்விந்தும் சோகமாக. என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறேன்? ஒன்றுமே நினைவில்லை. டாக்டர்கள் வந்து என்னை டெஸ்ட் பண்ணியதோ, பல டெஸ்ட்டுகளுக்கு ஆட்படுத்தப் பட்டதோ, அருண், காயத்ரி, கிருத்திகா, கணபதி சுப்ரமணியம், சுகவனம், சுதா, சதீஷ், ராமமூர்த்தி அத்திம்பேர் ஆகியோர் வந்தததோ ஒன்றுமே தெரியாது. Total blank. ECR-ல் ”தமிழினி” கடைக்கு அருகில் நடந்து வந்த போது, நான் திடீரென தலைகுப்புற கீழே விழுந்திருக்கிறேன். மயக்கமாகி

ஸ்ரீகோதண்டராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மாம்பலம்

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தான் புதிதாக சொல்லத் தொடங்கியுள்ள ஸ்ரீராமாயண உபந்யாஸத்தில் நேற்று (6-4-2012) காலை கோதண்டராமர் கோயிலையும், அந்த கோயிலில் உள்ள ஸஞ்சீவ பர்வத ஹனுமானையும் பற்றி விவரித்தார். உடனே சென்று ஸ்ரீராமரையும், ஹனுமானையும் தரிஸிக்க ஆசை வந்தது. மாலை 4 மணிக்கு நானும், விஜயாவும் கிளம்பிவிட்டோம். தி.நகர் பஸ் நிலையத்திற்கு மிக அருகில், மேற்கு மாம்பலத்தில் மேட்லி ரோட் கீழ்ப்பாதை (SUBWAY) முடியும் இடத்தில் அதன் இடது பக்க தெருவில் இந்த கோயில் உள்ளது. 150 வருஷங்கள் புராதனமானது. பிரதான வாயிலில் நுழைந்தால் அங்கு ஸ்ரீ ஹனுமான் சன்னதி இருக்கிறது. இந்த ஹனுமானைப் பற்றித்தான் ஸ்ரீ வேளுக்குடி காலையில் விவரித்தார். ஹனுமானை நன்கு தரிஸித்துக் கொண்டோம். பிரதான வாயில் - கோதண்டராமர் கோயில் முக்கிய சன்னதியின் இடது புறத்தில் ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. தாயாரை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தால், ஸீதம்மா, லக்ஷ்மண், ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காக்ஷி அருளுகிறார். பத்ராசலம் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்குதான் பட்டாபிஷேக ராமர் இருக்கிறார். கோதண்டராமர் கோயில் வில்லேந்

ஸ்ரீகபாலீஸ்வரர் திருத்தேர் - மயிலாப்பூர். 2012

மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீச்வரர் திருக்கோயிலில் இந்த வருஷம் பங்குனி உற்சவம் மார்ச் 27_ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. மார்ச் 30 காலை அதிகார நந்தியில் ஸ்வாமி புறப்பாடு. ஏப்ரல் 1_ஆம் தேதி ரிஷப வாஹனம். ஏப்ரல் 3-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 7-30க்கு திருத்தேர். விஜயாவும் நானும் சீக்கிரமே எழுந்து, குளித்து, 7 மணிக்கு மயிலாப்பூர் கிளம்பினோம்.  மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்தோம். உமாவும் வந்தாள். ஆதம் தெரு வழியாகச் சென்று தேரை தரிஸித்தோம். விநாயகர், ஸ்வாமி, அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களையும், ஸ்வாமிகளையும் நன்கு தரிஸித்தோம். ஸ்வாமி தேருக்கு மட்டும் கூட்டம் இருந்தது. விநாயகர் தேர் ஸ்வாமி தேர் ஸ்வாமி தேர் அம்பாள் தேர் முருகன் தேர் தேர்களை தரிஸித்த பின்னர், கோயிலுக்குச் சென்றோம். அம்பாள், ஸ்வாமியை கண்குளிர தரிஸித்தோம். திரும்பும் வழியில், மாமி மெஸ்ஸில் இட்லி சாப்பிட்டோம். நீண்ட நேரம் பஸ்ஸுக்காக மந்தைவெளியில் காக்க வேண்டியிருந்தது. 11 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம். ஏப்ரல் 4-ஆம் தேதி (புதன்) 63-வர்

Srimad Ramayanam - Velukkudi Sri Krishnan Swamigal

Rama + Ayana translating roughly to "Rama's journey" is the oldest epic (itihasa), apart from Mahabharat, in Indian culture. Written by the saint Valmiki in about 5th to 4th century BC, this epic has 6 kandas (காண்டங்கள்) - பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம். (ஏழாவது காண்டமாக உத்தர காண்டம் சொல்லப்படுகிறது, ஆனால் இது வால்மீகியால் எழுதப்படவில்லை, பின்னால் சேர்க்கப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்). 645 ஸர்க்கங்களும், 24000 ஸ்லோகங்களும் அடங்கியது. 1.    பால காண்டம் = 77 ஸர்கங்கள் -- 2266 ஸ்லோகங்கள் 2.    அயோத்யா காண்டம் = 119 ; 4185 3.    ஆரண்ய காண்டம் = 75;  2441 4.    கிஷ்கிந்தா காண்டம் = 67;  2453 5.    சுந்தர காண்டம் = 68;   2807 6.     யுத்த காண்டம் = 128;  5675 7.     உத்தர காண்டம் = 111;  3373 ஸ்லோகங்கள் மொத்தம், 7 காண்டங்கள்;  534+111 = 645 ஸர்கங்கள்; 19827 + 3373 = 23200 ஸ்லோகங்கள். தமிழில் திரு கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில், படலங்களும், பாட்டுக்களும் உள்ளன. பால காண்டம் = படலங்கள் 24;  பா

திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் முந்தாநாளும், நேற்றும் (31-03-2012 மற்றும் 01-04-2012) அடையாறு ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் மாலை 6-30க்கு “திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் உபந்யாஸம் செய்தார். 31-ஆம் தேதியன்று விஜயாவும் நானும் சென்றோம். 5 மணிக்கே சென்று முதல் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். 6-30க்கு ‘எள் போட்டால் எள் விழாத’ அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. நிறைய விஷயங்கள் சொன்னார். பெருமாளை தரிஸிக்க ஏன் மூன்று த்வாரங்கள் என்பதை விளக்கினார். முதலில் திருவடிகள், அடுத்து நாபிக்கமலம், இறுதியில் திருமுடி (திருமுகம்) என தரிஸிக்கும் முறையை சொன்னார். அனந்த காடு குறித்த வரலாறையும், தேங்காய் சிரட்டையில் அரிசி நொய்க் கஞ்சி, உப்பு மாங்காய் ஏன் நைவேத்யமாக ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப் படுகிறது என்பதற்கான வரலாற்றை கூறினார். இன்னும் பல பல விஷயங்களை சொன்னார். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஏப்ரல் 1-ஆம் தேதி நாங்கள் போகவில்லை. கோயில் இருக்கும் ரோடையே அடைத்து விட்டு அங்கும் நாற்காலிகள் போட்டு பக்தர்களை உட்கார்த்தி வைத்தனர் எனவும், இதுவும் போத