Skip to main content

Posts

Showing posts from 2012

Srimath Ramayana AYODYA KANDAM

அயோத்யா காண்டம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ணி வருவது தெரிந்ததே. இன்று (10-12-2012) 179வது உபன்யாஸம் செய்தார்; அயோத்யா காண்டம் - ஸ்ரீ ராமபிரான் காட்டிற்கு போகும் படலம்/ இந்த காண்டத்தில் ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளை விவரிக்கிறது. பின்னர் மந்தரையின் வார்த்தைகளை கேட்டு மயங்கிய கைகேயி அரசன் தஸரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்கிறாள். தன் மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருஷங்களுக்கு காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே அந்த இரண்டு வரங்கள். முதலில் மறுத்த அரசன் பின்னர் ஒத்துக் கொண்டு மூர்ச்சையாகி விடுகிறான். ராமனை அழைத்து இந்த வரங்களைப் பற்றி தெரிவிக்கிறாள். எந்த வித வாட்டமும் இல்லாமல் ராமன் காடு செல்ல ஏற்றுக் கொண்டு தன் தாய் கௌஸல்யாவிடம், தம்பி லக்ஷ்மணன், மனைவி ஸீதாவென எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு காடு செல்ல தயாராகி விட்டான். இனி விவரமாக, செய்தியைக் கேட்டதும் கௌஸல்யா மூர்ச்சையாகி கீழே விழுகிறாள்; மூர்ச்சை தெளிந்ததும் சோகமாகி விடுகிறாள் (2:20) லக்ஷ்மணன் மிக கோபமாக பேச ஆரம்பிக்கிறான்

Happy Moments in Life - 02

வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். Part 02 நமது வாழ்ககை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் சந்தோஷமான சில நிமிஷங்கள் வரும். அந்த சில நிமிஷங்களைத் தவற விடாமல், ரசித்தோமானால் என்ன ஒரு அதீதமான மன மகிழ்ச்சி !     குழந்தை அர்ஜுன் குறித்து எழுதினேன்; இது வேறு. செடிகளைப் பற்றியது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் (Terrace) ஒரு சிறிய தோட்டம் போட்டுள்ளோம்; 10-12 தொட்டிகளில் தக்காளிப்பழம், பச்சை மிளகாய், துளஸி, கறிவேப்பிலை, மற்றும் சிலப் பூச்செடிகள் போட்டுள்ளோம்.   முதலில் சில மாஸங்களுக்கு watchman தான் தண்ணீர் விடுவார். ‘கடனே’யென்று அவர் இந்தப் பணியை செய்துவந்தார். பல செடிகள் காய்ந்து பட்டுப் போக ஆரம்பித்தன. “நாமே ஏன் தண்ணீர் விடக்கூடாது?” என எண்ணி, 2012 செப்டம்பர் 1ஆம் தேதி ஆரம்பித்தேன். தினந்தோறும் காலை 6-45க்கு சென்று தண்ணீர் ஊற்றுகிறேன். 20-25 நிமிஷங்கள் ஆகும்.   இன்று மூன்று மாஸங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. செடிகள் என்னமாக வளர்ந்திருக்கின்றன !! நிறைய பூக்களும், காய்களும்.    செப்டம்பர் 22 தேதி வாக்கில், பத்மா அக்கா வீட்டிலிருந்து (அம்பத்தூர்) சிறிய 6 செமீ உயர துள

Happy Moments in Life - 01

வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். நமது வாழ்ககை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் சந்தோஷமான சில நிமிஷங்கள் வரும். அந்த சில நிமிஷங்களைத் தவற விடாமல், ரசித்தோமானால் என்ன ஒரு அதீதமான மன மகிழ்ச்சி ! இவ்வாறான என் வாழக்கையில் “சில நிமிஷங்களை” பற்றி எழுத் இருக்கிறேன். முதலில் குழந்தை அர்ஜுன். என் கடைசி மகன் அர்விந்திற்கும், மருமகள் கிருத்திகாவிற்கும் பிறந்துள்ள தங்கக் கட்டி. 2012ம் வருஷம் ஜூன் 2ஆம் தேதி யன்று பிறந்தான். இன்று ஆறு மாஸமாகிறது. குழந்தைக்கு Rocker என்று சொல்லும்படியான ஒரு பரிசு வந்தது. தங்கள் குழந்தை சிறியவனாக இருந்தபோது அவனுக்காக அவன் பெற்றோர் (Mr SAI and Mrs Saveetha) லண்டனில் வாங்கியது. அர்ஜுனுக்கு பரிசாக கொடுத்து விட்டார்கள். குழந்தையை இதில் படுக்க வைத்தால் அவனது ஆட்டத்திற்கு ஏற்றாற் போல இதுவும் ஆடும் (குதிரையில் போகிறாப் போலே இருக்கும்). குழந்தை பார்த்து ரசிப்பதற்கு 3 பொம்மைகள் உள்ளன. அவையும் வேகத்திற்கு ஏற்ப ஆடும். அதில் ஒன்றை (நடுவில் இருக்கும் பொம்மை) பிடித்து இழுத்தால் அது பாட்டு பாடும் (battery inside). அர்ஜுன் முதலில் சும்மாதான் ப

ஸதாபிஷேகம்

Sathabishekam புதுதில்லியில் தனது மாமா ஸ்ரீதண்டபாணி ஐயர் அவர்களின் ஸதாபிஷேகம் நவம்பர் 30-ஆம் தேதியன்று மிக சிறப்பாக நடந்ததை குறித்து எழுதியபோது, வாசு இவ்வாறு சொல்லியிருந்தான் --- “Sadhabishegam is a rare event and if anyone had an opportunity to attend such function considered to be lucky. Had an opportunity to attend the Sadhabishegam of my uncle Dhandapani on 30th Nov 2012 at Gurgaon.... “ மிகவும் உண்மை. யாருடைய ஸதாபிஷேகம் விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என ஒரு நிமிஷம் யோசித்தேன் --- ஊஹூம், நம் அப்பாவின் ஸதாபிஷேகம் தான் நான் கலந்துகொண்ட ஒரே ஸதாபிஷேகம். (நம் உறவினர்களில், இதுவரை). அது 1979-ல். கடந்த 33 வருஷங்களில் ...? ஊஹூம். சௌ நீரஜாவின் அம்மா வழி தாத்தா ஸ்ரீமான் நாகராஜ ஐயரின் ஸதாபிஷேகம் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் நடந்தது; அதற்கு போயிருந்தேன். வாசு எழுதியது போல, இது ஒரு அற்புதமான, அரிய நிகழ்வு. நமது ப்ராஹ்மண சமூகத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் மொத்தம் 16 ஸம்ஸ்காரங்கள் (ஷோடஸ ஸம்ஸ்காரங்கள்) செய்து கொள்ள வேண்டுமென சாஸ்திரங்கள் / வேதங்கள் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் ஸத

Padma Akka - Remembrance

பத்மா அக்கா நினைவு அஞ்சலி நம் அப்பா-அம்மா (ஸ்ரீ GR சுப்ரமணிய அய்யர் - ஸ்ரீமதி சம்பூரணம்) அவர்களின் குமாரத்தியாக சௌ பத்மாவதி 04-04-1936 சனிக்கிழமை (ஞாயிறு விடியற்காலம் 02-15 மணிக்கு), யுவ வருஷம் பங்குனி 23-ஆம் தேதியன்று சுக்ல சதுர்த்தசி திதியும், உத்திரம்(1) நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சேலத்தில் பிறந்தாள். சேலத்தில் பல வருஷங்கள் வசித்த பிறகு, நம் அப்பா-அம்மா 1948-வாக்கில் கடலூர் வந்தனர். அங்கு புதுப்பாளையம் St Anne's Girls High School-ல் பத்மா அக்கா படித்தாள். வந்த புதிதில் புதுப்பாளையம் போன்ற இடங்களில் வசித்து வந்த நம் குடும்பம், 1954ம் வருஷம் அப்பா சொந்த வீடு வாங்கியதும், திருப்பாப்புலியூருக்கு 17 பாபுராவ் தெருவிற்கு நம் சொந்த வீட்டிற்கு அக்டோபர் – நவம்பரில் குடியேறினோம். [1993 வரை இந்த வீட்டில் இருந்தோம்] அவள் SSLC முடித்ததும்,. கொஞ்ச நாட்கள் நம் அம்மாவிற்கு வீட்டு வேலை, சமையல் வேலைகளில் உறுதுணையாக இருந்து வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டாள். ஈயச் சொம்பில் பத்மா அக்கா பண்ணும் ரஸத்தை டம்ளர் டம்ளராக குடிக்கலாம் – அவ்வளவு ருசியாக இருக்கும். 1955-ம் வருஷம்

பத்மா அக்கா இறுதிக் காரியங்கள்

10 ஆம் நாள் காரியங்கள் 2012 செப் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 06:05க்கு பத்மா அக்கா காலமானதை முன்பே எழுதினேன். இடியென காதில் விழுந்த செய்தி அது. புரட்டாசி, சுக்ல சதுர்த்தசி திதி. பிரகாஷ் தன் அம்மாவின் காரியங்களை தினம் தினம் செய்தான். பத்தாம் நாள் காரியம் அக்டோபர் 08ம் தேதி வந்தது. அதற்கென அஷோக்கும் நீரஜாவும் பெங்களூரிலிருந்து அக் 7-ஆம் தேதி (ஞாயிறு) வந்தனர். முன்னாதாக அக் 2ம் தேதி அருண், காயத்ரி பெங்களூரிலிருந்து வந்து உடனே அம்பத்தூர் சென்றனர். காயத்ரியின் அப்பாவும் சென்றார். 8 ஆம் தேதி (திங்கள்) காலை 7-15க்கு 10 ஆம் நாள் காரியத்திற்காக அருண் காரில் விஜயா, நான், அஷோக், நீரஜா கிளம்பினோம். அஷோக் ட்ரைவிங். சுகவனத்தையும் கூட்டிக் கொண்டு போனோம். மங்களம், கோபி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, (ரமேஷ் மனைவி) விஜி, மற்றும் லலிதா, குமார், ராஜேஸ்வரியின் பெற்றோர் வந்தனர். எங்களையும் சேர்த்து 17 பேர். பிரகாஷ், ராஜேஸ்வரி, ஸ்ரீவித்யா, அவள் பெண் ஐஸ்வர்யா சேர்த்து 21 பேர். காலை 10-20க்கு 10 ஆம் நாள் காரியங்கள் தொடங்கின. எல்லா பெண்மணிகளும் “பத்து” கொட்டினர். 11-30 க்கு அருகிலுள்ள்

Padma akka Passed Away

பத்மா அக்கா மறைவு. அம்பத்தூரில் பத்மா அக்கா சிறிது உடல் நலம் இல்லாமல் இருக்கிறாள் என கேள்விப்பட்டு, விஜயாவும், நானும் செப்டம்பர் மாஸம் (2012) 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7-45க்கு பஸ்ஸில் கிளம்பினோம். அம்பத்தூருக்கு 6-45 க்கு சென்றடைந்தோம். அக்கா மிகவும் மெலிந்து காணப்பட்டாள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது. நாங்கள் சாப்பிடும்போது அவளையும் கையைப்பிடித்து மெதுவாக அழைத்துப் போய், டேபிளில் உட்கார வைத்து கொஞ்சம் சாப்பிட வைத்தேன். ”வாந்தி வருகிறது,” என அவள் சாப்பிட மறுத்தாள். பலவந்தமாக மூன்று சிறு கவளங்கள் சாப்பிட வைத்தேன். பகல் 3-30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு திரும்பினோம். வீட்டிற்கு வந்து, சரோஜா, சாவித்திரி, சுகவனம், ஜெயராமன், மங்களம் (தி.மலை) எல்லாருக்கும் போன் பண்ணி பத்மா குறித்து விஷயம் சொன்னேன். மறுநாள் ஞாயிறு (23) ஜெயராமன் குடும்பத்துடன் அங்கு சென்றான். திங்கட்கிழமை (24-ஆம் தேதி) ரமேஷ் குடும்பமும், சரோஜா, அத்திம்பேரும், சுகவனமும் சுதாவும் சென்றனர். ஆக எல்லாரும் சென்றுவிட்டனர். எல்லாரும் பத்மா அக்காவை உயிருடன் பார்ப்பது இதுதான் கடைசியாக இருக்கும் என்பதோ, இன்னும் ஆறே

ஸ்ரீமத் ராமாயணம் - பால காண்டம்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸம் சென்ற 31 மார்ச் 2012 முதலாக சொல்லி வருகிறார். (பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30 மணிக்கு). இதைப் பற்றி நான் எழுதியதை இங்கு படிக்கலாம் . ராமாயணம் மொத்தம் 6 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பால காண்டம் என்பது முதல் காண்டம். இதில் 77 ஸர்கங்கள் உள்ளன. அயோத்யா மஹாராஜனான தசரதனுக்கு ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என 4 பிள்ளைகள் பிறந்தது முதல்,  அந்த நால்வருக்கும் மிதிலையில் திருமணம் முடியும் வரை பால காண்டம் சொல்லுகிறது. ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரரின் யாகத்தை ராமர் காத்தது, ராக்ஷசி தாடகையை அழித்தது, பின்னர் அவரும், தம்பி லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரருடன் மிதிலா நகரம் நோக்கி சென்றது, நடுவில் கௌஸிக முனிவரின் பத்னியாகிய அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலா ராஜ்யத்தின் அரசனான ஜனக மஹாராஜாவின் சிவதனுஸை முறித்தது, பின்பு ஜனகனின் புத்ரியாகிய ஸீதாவை ராமர் கல்யாணம் செய்து கொண்டது, பரசுராமரின் கர்வத்தை அடக்கியது போன்றவை பால காண்டத்தில் முக்கியமாக விளக்கப்படுகின்றன. ஸீதா கல்யாணத்தை பஜனை ஸம்ப்ரதாயத்தில் பஜனை

விநாயகர் சதுர்த்தி - 2012

விநாயகர் சதுர்த்தி - 2012. இந்த ஆண்டின் (2012) விநாயகர் சதுர்த்தி 19 செப்டம்பர் புதன்கிழமை வந்தது. பாத்ரபதம் மாஸம், சுக்ல சதுர்த்தியன்று இது நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. பூக்கள், பத்ரங்கள், பழங்கள் இவற்றை கிருத்திகாவின் அப்பா கோயம்பேட்டிலிருந்து தருவித்தார். 18-ஆம் தேதியன்று நானும், விஜயாவும் மார்க்கெட் சென்று மீதி பழங்களையும், வெற்றிலை முதலானவைகளையும் வாங்கினோம். 19-ஆம் தேதி காலையில் கிருத்திகா பூஜை அறையையும் மற்ற பூஜா சாமான்களையும் நன்கு அலம்பி சுத்தம் பண்ணினாள். 10.30க்கு அர்விந்த் பிள்ளையார் உருவம் வாங்கி வந்தான். அதிதியும் சென்றாள். TSGக்கும் சேர்த்து இரண்டு வாங்கினான். கிருத்திகா பிள்ளையாருக்கும் அலங்காரம் பண்ணினாள். முதல் நாளே விஜயா மாவு அரைத்து ரெடி பண்ணிக் கொண்டாள். இன்று காலை அவள் மிக மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டாள். தனியாகவே முழுதும் செய்தாள். மூன்று வித கொழுக்கட்டைகள், வடை, பாயஸம், முருங்கை சாம்பார், கோஸ் கறி பண்ணினாள். பூஜை ஆரம்பிக்க மிகவும் லேட்டாகியது. 12 மணிக்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை செய்தான். முடிக்கும்

இனிய காலைப் பொழுதுகள்

காலை 4-15க்கு எழுந்து கொள்வது, உடனே குளிப்பது, பின்னர் 4-45க்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் முதல் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாராயணம் செய்வது, 6-30க்கு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாஸம் கேட்பது, 6-45க்கு நியூஸ்பேப்பர் என்று கடந்த 6 வருஷங்களாக வழக்கமாக கொண்டுள்ளேன். சென்ற 25 நாட்களாக நான் சில புது வழக்கங்களை ஆரம்பித்துள்ளேன். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் உபன்யாஸம் 6-45க்கு முடிந்த கையோடு, நான் மேலே மொட்டை மாடிக்குப் போய்விடுகிறேன் (இரண்டு மாடி ஏறி போகிறேன்). அங்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, மீண்டும் வேறுபல பாராயணங்களை சொல்லுகிறேன். சூரியனைப் பார்த்து சூரிய சுடரில் உட்கார்வதால் வைட்டமின் D மற்றும் B12 கிடைக்கின்றன. இது டாக்டரின் ஆலோசனை. 30 நிமிஷம் கழித்து, மொட்டைமாடியிலேயே 30 நிமிஷம் நடக்கிறேன். மணி 7-45 ஆகிவிடும். அடுத்த 15-20 நிமிஷங்களுக்கு அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன். தண்ணீர் ஊற்றுவது பரம ஆனந்தம் தருகிறது. பின்னர் கீழே வருகிறேன். இவ்வாறு காலைப் பொழுது இனிமையாக போகிறது. எல்லாம் ஸ்ரீராமனின் அருள். ராஜப்பா காலை 10:30 மணி 16-9-2012

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் கோயில்

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள். திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள வேதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த பகவான். நேற்று (9-9-2012) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்தக் கோயிலுக்கு போகவேண்டும் என்ற ஆசை திடீரென எனக்குள் எழுந்தது. விஜயாவும் நானும் 4-15க்கு கிளம்பி விட்டோம். திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏதோ ஒரு பஸ்ஸை பிடித்து திருவான்மியூர் ரயில் நிலையம் சென்று, ஏறி, இறங்கி 5-15 மணி ரயிலை பிடித்தோம். 5.00 டிக்கெட். [மந்தைவெளி போக பஸ்ஸில் கட்டணம் என்ன தெரியுமா? ரூ 11.00] 5.30 சுமாருக்கு திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் இறங்கி, கண்ணகி சிலை தாண்டி, PYCROFTS ROADல் [பாரதி சாலை] திரும்பி, ஆட்டோ பிடித்து, ஸ்ரீ பார்த்தஸாரதி கோயிலுக்கு சென்றோம். என்ன ஒரு தெய்வீகமான சூழ்நிலை! கோயிலில் நிறையக் கூட்டம் இல்லை. 10 நிமிஷங்கள் க்யூவில் நின்ற பிறகு பெருமாளின் தரிஸனம் கிடைத்தது. நம் அருகில் வந்து நின்று காதில் கீதோபதேசம் சொல்வதாக எண்ணம் வருகிறது. கிட்ட நின்று, கீதாசாரியனை, ”பிதா அஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ” என்று உலகத்திற்கே தந்தை, தாயான அந்த பரமாசாரியனை வணங்க

Tamil Festivals

தமிழ் பண்டிகைகள். தமிழ் வருஷத்தில் சித்திரை (ஏப் 14 - மே 13) வைகாசி, ஆனி,ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி (அக்டோ 14 - நவ-16), கார்த்திகை, மார்கழி (டிச17- ஜன 14), தை, மாசி, பங்குனி என 12 மாசங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட அதே ஆங்கில தேதிகளில் தான் பிறக்கும். மாறுதல் நிறைய இருக்காது. தெலுங்கு வருஷத்தில் சைத்ரம், வைஷாகம், ஜேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீஜம், கார்த்தீகம், மார்க்கசீரம், புஷ்யம், மாகம், பால்குன என 12 மாசங்கள் உள்ளன. கிட்டத்தட்ட, சித்திரை என்பது சைத்ரம், வைகாசி = வைஷாகம், ஆனி = ஜேஷ்டம், ஆடி = ஆஷாடம், ஆவணி = சிராவணம், புரட்டாசி = பாத்ரபதம், ஐப்பசி = ஆஸ்வீஜம், கார்த்திகை = கார்த்தீகம், மார்கழி = மார்க்கசீரம், தை = புஷ்யம், மாசி = மாகம், ப்ங்குனி = பால்குனி. ஏறத்தாழ, குறிப்பிட்ட மாசத்தில் பௌர்ணமி எந்த நக்ஷத்திரத்தில் வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரே அந்த மாசத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இனி, நாம் கொண்டாடும் முக்கிய விசேஷ நாட்கள் / பண்டிகைகளைப் பார்ப்போம். பல பண்டிகைகளை நாம் தமிழ் மாச முறைப்படியும், இன்னும் பலவற்றை தெலுங்கு மாச முறைப்ப

Srimad Bhagavad Gita - 17th Chapter

பகவான் ஸ்ரீகண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையில் 17-வது அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தில் பகவான் மூன்றுவித சிரத்தைகளைப் பற்றி விவரிக்கிறார். தேகம் எடுத்தவர்களுக்கு இயல்பாக உண்டான சிரத்தையானது சாத்விக மென்றும், இராஜஸமெ ன்றும், தாமஸ மென்றும் மூன்று விதமாயிருக்கிறது. எந்தெந்த ஆகாரங்களினால் இந்த மூன்று வகை சிரத்தை உண்டாகும் என விவரித்தவர், மேலும் கூறுகிறார்: ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப்பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனைகள் ராஜஸமானது என்கிறார். வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணையில்லாததும், சிரத்தையற்றதுமாகிய யக்ஞம் தாமஸிகம் என சொல்லப்படுகிறது. மனிதன் சிரத்தையோடு எதை பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணையாகிறது. தவம் யாது? விளக்குகிறார் பகவான். தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். மெய் (உடல்), மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் கொண்டவன் மனிதன். இம்மூன்று கரணங்க

Horoscope Developing

நெடுநாட்களாகவே எனக்கு ஜாதகம் கணிக்க வேண்டும், அதுவும் நானே எழுதிய மென்பொருளை(Software) உபயோகித்து கம்ப்யூட்டரில் கணிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. வேலையிலிருந்து ஓய்வு பெற்று 2001 டிசம்பரில் சென்னை வந்ததும் இந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. கிரியில் நிறைய புஸ்தகங்கள் வாங்கி, படித்து என் ஜாதக அறிவை வளர்த்துக் கொண்டேன். இதில் முக்கியமாக Dr BV RAMAN எழுதிய சில புஸ்தகங்களும் அடங்கும். BV ராமனின் 2001-2050 க்கான 50-வருஷ EPHEMERIS புஸ்தகம் மிகவும் முக்கியமானது. Ephemeris என்பது விண்வெளியில் சூரியன் முதலான எல்லா க்ரஹங்களின் தினப்படி நிலையை (டிகிரியில்) அவைகள் சுழலும் விதிப்படி கணித்து புஸ்தகத்தில் போடுவது. 2001 தொடக்கம் 2050 வரை 50 வருஷங்களுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் (50 X 365 நாட்கள்) இந்த டிகிரி (LONGITUDE in Degrees-Minutes) ராமனின் இந்த புஸ்தகத்தில் போடப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஜாதகம் கணிப்பது முடியாது. ஜூலை 2002-ல் இதை வாங்கினேன். இதுவும் கிரியில்தான் வாங்கினேன். பல புஸ்தகங்கள், பாம்பு பஞ்சாங்கம் இவற்றைப் படித்து கொஞ்சம் ஜாதக அறிவு வந்ததும், Microsoft EXCEL உபயோகித்து முதல் ஜாதகத்தை

Rangachari Cloth Store, Mylapore

இது என்னுடைய 601-வது blog-post. இன்று 5-9-2012 காலையில் ஒரு விளம்பரம் வந்தது. மயிலாப்பூர் ரங்காச்சாரி கடையில் தள்ளுபடியில் புடைவை விற்பனை. விஜயா உடனே முடிவெடுத்தாள், அங்கு போவதென. மதியம் 4 மணிக்கு கடையில் இருந்தோம்.  அலைமோதும் கூட்டம் என சொல்ல மாட்டேன்; ஆனால் நல்ல கூட்டம். என்னைப் போன்று ஓரிரு ஆண்களைத் தவிர மீதி அத்தனை பேரும் பெண்மணிகள் - 95 % பிராமணர்கள் - 98% 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். வாங்கிவிட்ட பெண்மணிகளின் கையில் சராசரியாக 5 (அ) 6 புடைவைகள் ! அள்ளிக் கொண்டு போனார்கள். சராசரியாக ஒவ்வொருத்தரும் ரூ 3000/- செலவழித்திருப்பார்கள். விஜயா எத்தனை வாங்கினாள் - அது ரகசியம்..... ராஜப்பா 5-9-2012 7 மணி மாலை.

Milestone 600

இன்று 4-9-2012 நான் 600-வது மைல்கல்லை எட்டினேன். BLOG எழுத ஆரம்பித்து சுமார் 8 வருஷங்கள் ஓடிவிட்டன (14 ஜூலை 2004). இதோ 600-வது blogஐ முடித்து விட்டேன். 07 மே 2011-ல் 500-வது போஸ்ட்டை எழுதினேன். ஏறத்தாழ 13 மாசங்களில் 500 லிருந்து 600 ஆக எட்டியுள்ளது. ஆண்டவனுக்கு என் நம்ஸ்காரங்கள். ராஜப்பா 4-9-2012 7-15 PM

புது பழக்கங்கள் New Habits

ஏப்ரல் 10, 2012 செவ்வாயன்று ரோடில் கீழே விழுந்ததையும், Brain Scan பண்ணிக் கொண்டதையும் முன்பு எழுதினேன். காலை 4-15க்கு எழுந்திருப்பதை 5-30 என மாற்றிக் கொண்டதையும் குறிப்பிட்டேன் இப்போது, ஆகஸ்ட் 18 (சனிக்கிழமை) 5-15க்கும், 19ஆம் தேதி 5 மணிக்கும், 20 ஆம் தேதி முதல் மீண்டும் 4-15க்கும் எழுந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். முழு பாராயணங்களும் சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஏப்ரல் 11 முதல், ஆகஸ்ட் 20 வரை 4 மாசங்களாக நிறுத்தியிருந்தேன். ஆகஸ்ட் 23 (வியாழன்) முதல் காலை 6-50க்கு மொட்டை மாடிக்கு (Terrace) க்குச் சென்று காலை-சூரிய கிரணத்தில் புதிதாக வேறு பல் பாராயணங்களை சொல்கிறேன். 1/2 மணி நேரத்திற்கு பிறகு அங்கே 30 நிமிஷம் நடக்கிறேன். சுமார் 8 மணிக்கு கீழே வருகிறேன். விடியற்காலம் 5-30க்கு பாலிற்காக கீழே ஒரு மாடி இறங்கி ஏறுவதையும், பின்னர் 6-50க்கு Sun-Bathற்கு மொட்டை மாடி (இரண்டு மாடிகள்) ஏறி இறங்குவதையும் LIFT உபயோகிக்காமல், படி ஏறி இறங்குகிறேன். மூன்று நாட்களாக இன்னொரு வேலையும் செய்கிறேன் - மொட்டை மாடியில் உள்ள 10-12 செடித் தொட்டிகளுக்கு தண்ணீர் விடுகிறேன். இது என்னுடைய DREAM Hobby. காலை 4-30 முத

Mylapore

மயிலாப்பூர். நேற்று (16/08/2012) மாலை நாங்கள் இருவரும் மயிலாப்பூர் சென்றோம். மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்று நான்கு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. முதலில் தெற்கு மாட வீதி வழியாகச் சென்று, சில காய்கறிகள் வாங்கினோம். மிதி பாகற்காய், சுண்டைக்காய், களாக் காய், சில கொட்டை வகைகள் போன்ற அரிதானவற்றை வாங்கினோம். பின்னர் கோயில் நோக்கி புறப்பட்டோம். வழியில், ”ஜன்னல் கடையில்” மிளகாய் பஜ்ஜி, உ.கிழங்கு போண்டா ஆகியவற்றை சாப்பிட்டோம். இந்த கடையைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். கூட்டம் இன்னும் குறையவில்லை. பஜ்ஜியும், போண்டாவும் “பறந்து” கொண்டிருந்தன. விலையைத் தான் ஏற்றி விட்டார்கள். கோயிலில் வழக்கம்போல பக்தர்கள் கூட்டம். பளபளவென்றிருந்தது. ஸ்ரீகற்பகாம்பாள் உடனாய ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு திருப்தியாக தரிஸித்துக் கொண்டோம். கோயிலில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டன. அடுத்து, கிரி கடை. யஜுர் உபாகர்மா புஸ்தகம் (சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும்) வாங்கினேன். விரைவிலேயே கிரி கடை தன்னுடைய இன்னொரு கிளையை அண்ணாநகரில், ஐயப்பன் கோயிலுக்கு அருகில், திறக்க இருக்கிறார்கள். அம்பிகா கடைக்குச் சென்று அப்பளம் முதலான சில

Srimad Ramayanam - Sri Velukkudi Krishnan

ஸ்ரீராமாயணம். 100th Episode ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இவைகளுக்கு அடுத்து, தற்போது ஸ்ரீராமாயணம் சொல்லி வருகிறார். கீதை சொல்ல ஆரம்பித்தது 18 ஜனவரி 2007-ல். 735 நாட்கள் சொன்னபிறகு, 6 நவம்பர் 2009-ல் கீதை நிறைவு பெற்றது. பின்னர் ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்ல ஆரம்பித்தார். 621 நாட்கள் சொன்னார்; 2012 மார்ச் 30-ஆம் தேதி நிறைவு. முடித்த அடுத்த நாளே ( 31-03-2012 அன்று ) ஸ்ரீராமாயணம் சொல்ல ஆரம்பித்தார், ஞாயிற்றுக்கிழமை ஆனபோதிலும் அன்று ஸ்ரீராம நவமியானதால் ஆரம்பித்து விட்டார். பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30 லிருந்து 6-45 வரை சொல்லி வருகிறார். முதல் ஆறு ஏழு நிமிஷங்க்ளுக்கு ஏதாவ்து ஒரு ராமர்/ஆஞ்சநேயர் கோயிலை காண்பித்து, கோயிலைப் பற்றிய விவரங்களை விஸ்தாரமாக விளக்குகிறார்; பின்னர் வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து ராமகாதையை சொல்லுகிறார். திங்கள் கிழமை ஆரம்பித்து ஒரு கோயிலை குறித்து தினமும் வெள்ளி வரை சொல்வார்; அடுத்த திங்கட்கிழமை வேறு ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வார். இன்று ( 17-08-2012 வெள்ளி ) ராமாயணத்தின் 100-வது பகுதி யை சொ

ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி பஞ்சவடீ கோயில்

ஸ்ரீஜயமங்கள விஸ்வரூப பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோயில் புதுச்சேரிக்கு அருகில் (9 கிமீ தூரத்தில்) உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி சென்ற 5 நாட்களாக வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தினமும் சொல்லி வருகிறார். கோயிலையும் காண்பித்து வருகிறார். மிகவும் வசீகரிக்கப்பட்டு, கோயிலைப் பற்றி மேலும் பல விவரங்கள் அறிந்து கொண்டேன். 1999-ல் கோயில் கட்டுவதற்கான எண்ணம் எழுந்தது. 36 அடி உயரமுள்ள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலை வடிக்க பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி தெரிந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயரின் சிலையை வடித்தவர். இவர் ”40 அடி நீளமுள்ள ஒரே கருங்கல் கிடைக்க வேண்டும்” என்றார். ஹனுமானின் அருளால் கல்லும் கிடைத்தது - அதுவும் புதுச்சேரியின் அருகில் சிறுதாமூர் என்ற இடத்தில். 150 டன் எடையுள்ள கல் சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தன்னுடைய ‘ஸ்வர்ணம் சிற்ப கலைக்கூடத்’தில் ஸ்தபதி ஜுன் 1999-ல் சிலையை வடிக்க தொடங்கினார். சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டு, புதுச்சேரிக்கு 04 ஜூன் 2003 அன்று எடுத்துச் செல்லப்பட்டது. 150 கிமீ தூரம் வழி முழுதும் ஆயிரக்கணக்க

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் குற

Fall - its sequel.

ஏப்ரல் 10, 2012 செவ்வாய்க்கிழமை தெருவில் திடீரென விழுந்ததையும் ஸ்வரம் ஹாஸ்பிடலில் ஒருநாள் இருந்ததையும் “ALL NORMAL, ஒன்றும் இல்லை” என டாக்டர்கள் சொன்னதையும் முன்பே எழுதினேன்.11-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். 12-ஆம் தேதி காலை CGHS சென்றோம். டெஸ்ட் ரிசல்ட்டுகளை பரிசீலித்து விட்டு, “ஒன்றும் இல்லை” என இந்த டாக்டரும் (டாக்டர் பார்த்தஸாரதி) சொன்னார். Aspirin Tablet STROMIX கொடுத்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) டாக்டர் மாதவனிடம் சென்று காண்பித்தோம். அவரும் ஒன்றுமில்லை எனக் கூறினார். ஒரு CT Scan of Brain (plain) எடுத்து வரும்படி சொன்னார். மீண்டும் CGHS இந்திராநகர் 23ஆம் தேதி சென்று, அந்த டாக்டர் மூலமாக scanக்கு PRECISON DIAGONOSTIC LAB, MG ROADற்கு சீட்டு வாங்கிவந்தோம். CGHS மூலமாக் சென்றால் எல்லாம் இலவசம் - சுமார் 3300.00 ரூ மிச்சம் ! ஏப்ரல் 25, 2012 புதன்கிழமை காலை 10 மணி சுமாருக்கு காரில் விஜயாவும் நானும் PRECISION Labற்கு சென்றோம்; அரை மணி கழித்து என்னை Scan அறைக்கு அழைத்தனர். படுக்க வைத்து BRAIN SCAN பண்ணினார்கள். 10 நிமிஷத்தில் முடிந்தது. 11-45க்கு காரில் வீடு திரும்பினோம்.

Fall On The Road

10 ஏப்ரல் 2012 செவ்வாய்க்கிழமை. அன்றையப் பொழுது வழக்கம்போல விடிந்தது. காலை 4-15க்கு எழுந்து, குளித்து, பாராயணங்கள் படித்து, 6-30க்கு பொதிகை டீவியில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஸ்ரீராமாயணம் உபன்யாஸம் கேட்டேன். காலை 7-30க்கு, விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போது காய்கறி வாங்க பைகள் எடுத்துக் கொண்டு, திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் கிளம்பினேன். காய்களும் வாங்கினேன். திரும்பும் போது மார்க்கெட் வாசலில் நுங்கும் வாங்கினேன். வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடக்க ஆரம்பித்ததுதான் தெரியும் - அடுத்து நான் கண் விழிக்கும் போது ஒரு ஹாஸ்பிடலில் இருந்தேன், கூடவே விஜயாவும், அர்விந்தும் சோகமாக. என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறேன்? ஒன்றுமே நினைவில்லை. டாக்டர்கள் வந்து என்னை டெஸ்ட் பண்ணியதோ, பல டெஸ்ட்டுகளுக்கு ஆட்படுத்தப் பட்டதோ, அருண், காயத்ரி, கிருத்திகா, கணபதி சுப்ரமணியம், சுகவனம், சுதா, சதீஷ், ராமமூர்த்தி அத்திம்பேர் ஆகியோர் வந்தததோ ஒன்றுமே தெரியாது. Total blank. ECR-ல் ”தமிழினி” கடைக்கு அருகில் நடந்து வந்த போது, நான் திடீரென தலைகுப்புற கீழே விழுந்திருக்கிறேன். மயக்கமாகி

ஸ்ரீகோதண்டராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மாம்பலம்

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தான் புதிதாக சொல்லத் தொடங்கியுள்ள ஸ்ரீராமாயண உபந்யாஸத்தில் நேற்று (6-4-2012) காலை கோதண்டராமர் கோயிலையும், அந்த கோயிலில் உள்ள ஸஞ்சீவ பர்வத ஹனுமானையும் பற்றி விவரித்தார். உடனே சென்று ஸ்ரீராமரையும், ஹனுமானையும் தரிஸிக்க ஆசை வந்தது. மாலை 4 மணிக்கு நானும், விஜயாவும் கிளம்பிவிட்டோம். தி.நகர் பஸ் நிலையத்திற்கு மிக அருகில், மேற்கு மாம்பலத்தில் மேட்லி ரோட் கீழ்ப்பாதை (SUBWAY) முடியும் இடத்தில் அதன் இடது பக்க தெருவில் இந்த கோயில் உள்ளது. 150 வருஷங்கள் புராதனமானது. பிரதான வாயிலில் நுழைந்தால் அங்கு ஸ்ரீ ஹனுமான் சன்னதி இருக்கிறது. இந்த ஹனுமானைப் பற்றித்தான் ஸ்ரீ வேளுக்குடி காலையில் விவரித்தார். ஹனுமானை நன்கு தரிஸித்துக் கொண்டோம். பிரதான வாயில் - கோதண்டராமர் கோயில் முக்கிய சன்னதியின் இடது புறத்தில் ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. தாயாரை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தால், ஸீதம்மா, லக்ஷ்மண், ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காக்ஷி அருளுகிறார். பத்ராசலம் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்குதான் பட்டாபிஷேக ராமர் இருக்கிறார். கோதண்டராமர் கோயில் வில்லேந்