Skip to main content

Posts

Showing posts from August, 2011

Lalitha Sashti abtha poorthy

விஜயாவின் தங்கை லலிதாவிற்கு இந்த வருஷம் 2011 ஆகஸ்டு 20 -ஆம் தேதியன்று 60 வயது பூர்த்தியானது. நக்ஷத்திரம் 21-ஆம் தேதியன்று வருகிறதா, இல்லை 20-ஆம் தேதியே வந்து விடுகிறதா என ஒரு சிறு குழப்பம். என்னைப் பொறுத்தவரையில் 21-ஆம் தேதி என்பதில் எனக்கு குழப்பமில்லை; ஆனால் அவர்கள் 20-ஆம் தேதியே ஹோமம் பண்ண இருப்பதாக சொன்னவுடன், நான் என் வாயை இறுக்க மூடிக்கொண்டு விட்டேன். 20-08-2011 சனிக்கிழமை காலை 7-10க்கு நான், விஜயா, அதிதி, இந்திரா, அர்விந்த் ஆகியோர் ஆவடி கிளம்பினோம். கிருத்திகாவால் வர இயலவில்லை. 8-15க்கு ஆவடி போய் சேர்ந்தோம். காலை சிற்றுண்டி இட்லி சாப்பிட்டோம். சாஸ்திரிகள் 8-45 சுமாருக்கு வந்து பூஜையை ஆரம்பித்தார்; கணபதி ஹோமமும், புண்யாகவசனமும் பண்ணினார். அருண், காயத்ரி, குழந்தைகள் 10 மணிக்கு வந்தனர். ஹோமம் முடியும்போது 10-15 இருக்கும். பின்னர் சாப்பாடு (காடரிங்). குமார்-லலிதா, ஜனனி, ராம், ப்ரத்யுன், பிரபாகர், மாமி, நாங்கள் 5 பேர், இந்திரா, அகிலா, ஜ்யோத்ஸ்னா, கோபு, சரோஜா, விஜய், குழந்தைகள், குமாரின் அக்கா, அக்கா பையன்கள், குடியிருந்த மாமா-மாமி என சுமார் 28 பேர் சாப்பிட்டோம். பின்னர் 1-30 மண

Sri Varalakshmi Vratham by Gayathri

ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதம். காயத்ரி போன வாரம் - 12-08-2011 வெள்ளிக்கிழமை - வரலக்ஷ்மி விரத பூஜை பண்ணவில்லை. அதனால், அவள் இந்த வெள்ளிக்கிழமை 19-08-2011 அன்று பூஜை பண்ணினாள். விஜயாவும் நானும் வியாழன் மாலை 4 மணிக்குக் கிளம்பி, 5 மணி சுமாருக்கு படூர் போய்ச் சேர்ந்தோம். விஜயா காயத்ரிக்கு சிலபல உதவிகள் செய்தாள். அருண் கடைத்தெருவிற்கு சென்று பூஜை சாமான்கள் வாங்கி வந்தான். அன்றிரவு நாங்கள் அங்கேயே தங்கினோம். மறுநாள் வெள்ளியன்று காலை குளித்து பூஜைக்கு தயாரானோம். நைவேத்தியங்களை செய்து, காயத்ரியும் தயாரானாள். காலை 10 மணிக்கு நான் மந்திரங்கள் சொல்ல, காயத்ரி பூஜை ஆரம்பித்தாள்.11மணி சுமாருக்கு பூஜை நிறைவுற்றது. தேங்காய் கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, வடை, பாயஸம் செய்து நிவேதனம் பண்ணினாள். சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் தூங்கி எழுந்தோம். மாலை 4 மணிக்கு கிளம்பி திருவான்மியூருக்கு 5 மணி அளவில் வந்து சேர்ந்தோம். போகும்போது “சொகுசு” பஸ்ஸிலும் (13.00) திரும்பும்போது ஏஸி பஸ்ஸிலும் (33.00) வந்தோம்.  இவ்வாறாக, இந்த வருஷம் வரலக்ஷ்மி பூஜை பண்டிகை நன்கு நடந்தது. ராஜப்பா 20-08-2011 3 PM

Rare words

வழக்கம் ஒழிந்த சில வார்த்தைகள் (வெந்நீர்) வெளாவுதல், (தண்ணீர்) சேந்துதல்,(தலை) துவட்டுதல் சட்டுவம், வாணலி, தாம்பாளம், சிப்பல் தட்டு, வெங்கலப் பானை, ஆப்பக்கூடு, கிண்டி, பாலாடை, கல்சட்டி, ஜோடுதவலை, கங்காளம், அருக்கஞ்சட்டி, குண்டான், ஏனம், கூஜா முறம், ஜல்லடை, உரல், உலக்கை, ஏந்திரம், ஆட்டுக்கல், அம்மி, கல்லுரல் (வெந்நீர்) அண்டா, சிம்னி, லாந்தர், அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு, பம்ப் ஸ்டவ், சீமை எண்ணெய், கழநீர் (அரிசி) புடைக்கிறது, நோம்பறது, களையறது, (வாழைப்பூ) கள்ளன், மடல் மடிக்கோல், வாங்கி, துரட்டுக்கோல், கொறடு, நடைவண்டி, பாக்குவெட்டி உழக்கு, ஆழாக்கு, மரக்கால், படி, வீசை, பலம், மாகாணி, தம்படி, கழக்கோடி,பலக்கல், நாழி குருணை, மணை, கோலக்குழாய் குமுட்டி, விறகு, கோட்டை அடுப்பு, ஊதுகுழல், கொட்டாங்கச்சி, தடுக்கு பலப்பம், சிலேட், சுருணை, தப்படி, எருமுட்டை, குதிர் ஓடு,, கீத்து, வாரை, உத்தரம், மாடம், திண்ணை, ரேழி,கூடம், மச்சு, தாவாரம், சமையல் உள், அடுக்களை, முத்தம் (முற்றம்), வெந்நீர் உள் பரண், அட்டம், பிறை, எரவாணம், நிலப்படி, தொட்டி முத்தம், வெந்நீர் உள், விசுப்பலகை கொ

Sri Varalakshmi Vratham - 2011

12-08-2011, வெள்ளிக்கிழமை: எல்லாருடைய வீடுகளைப் போலவே எங்கள் வீட்டிலும் இன்று ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதம் நன்கு நடைபெற்றது. முதல் நாளே பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து நிறைய முடிந்து விட்டன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கிருத்திகாவால் பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே 12-ஆம் தேதியன்று விஜயா மட்டுமே பூஜை செய்தாள். சொந்த வீட்டில் நடக்கும் முதல் வரலக்ஷ்மி பூஜை இது. காலையில் சீக்கிரமே எழுந்து பூஜைக்கான, நைவேத்தியத்திற்கான வேலைகளை விஜயா செய்ய ஆரம்பித்தாள். உதவிக்கு கிருத்திகாவின் அம்மா வந்தார். நான் பூஜையை 10-15க்கு ஆரம்பித்தேன். மந்திரங்களை நான் சொல்ல, விஜயா பூஜை செய்தாள். கூடவே அதிதியும் செய்தாள். சிறப்பாக நடந்தது. 11-30 சுமாருக்கு முடிந்தது. விஜயா பாயஸம், வடை, இட்லி, இரண்டு வித கொழுக்கட்டைகள் (எள், தேங்காய்), மற்றும் ஒரு கறி, ஒரு கூட்டுடன் சாப்பாடு பண்ணினாள். கிருத்திகாவின் பெற்றோர் இங்கு சாப்பிட்டனர். ஸௌம்யா, ஸ்ரீராம் இருவரும் அருணுடன் வந்தனர். அவர்களும் இங்கு சாப்பிட்டனர். இவ்வாறாக, இந்த வருஷ பூஜை வெகு விமரிசையாக நடந்தது. எல்லாருக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.