Skip to main content

Posts

Showing posts from June, 2010

Vishakha Hari ஸ்ரீமதி விஷாகா ஹரி

ஸ்ரீமதி விஷாகா ஹரி (விஸாகா ஹரி??) சென்ற வாரம் 26-06-2010 மற்றும் 27-06-2010 தேதிகளில் பெஸண்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலில் உபன்யாஸம் செய்தார். 26-06-2010 சனிக்கிழமை மாலை 6-45க்கு ” ஸ்ரீ சுப்ரமண்ய வைபவம் ” என்ற தலைப்பில் உபன்யாஸம் செய்தார். முருகன் மீது பல பாடல்களைப் பாடினார். அடுத்த நாள், ஞாயிறன்று, “ ஸ்ரீ ராம நாம மஹிமை ” குறித்து உபன்யாஸம் செய்தார். இந்த இரண்டு உபன்யாஸங்களுக்கும் என்னால் போக இயலவில்லை (கால் பந்து உலகக் கோப்பை !!) . விஜயா முதல் நாள் மட்டும் போனாள். இரண்டு உபன்யாஸங்களுமே நன்றாக இருந்தன என அறிந்தேன்; நிறையக் கூட்டமும். ராஜப்பா 29-06-2010 காலை 11:00 மணி

காஞ்சிபுரம் சென்றோம் ... Kanchipuram 2010

சென்ற ஞாயிறு (ஜூன் 6) நாங்கள் காஞ்சிபுரம் சென்றோம். நான், விஜயா, சுகவனம் ஆகிய மூவர் மட்டும் அர்விந்த் காரில் ஓட்டுனர் வைத்துக் கொண்டு சென்றோம். காலை 7-15 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றோம். எங்கள்  பெரியப்பாவின் கொள்ளுப் பேத்திக்கு காஞ்சியில் 7-ஆம் தேதி கல்யாணம். முதலில், சரோஜாவும், அத்திம்பேரும் வருவதாக இருந்தனர். சரோஜாவிற்கு காலில் அடி பட்டதால், அவர்கள் வரவில்லை. பெரியப்பா சாம்பமூர்த்தியின் 4 பிள்ளைகளில் மூத்தவர் வீரராகவன; இவரது மூத்த மகன் சுப்ரமணியத்தின் (மணி) மகளுக்கு கல்யாணம். கல்யாணம் தவிர நிறைய கோயில்கள் பார்த்து தரிஸிப்பதுதான் எங்கள் காஞ்சி பயணத்தின் முக்கிய நோக்கம். 6ஆம் தேதி காலை காஞ்சியில் இட்லி-பொங்கல்-வடை சாப்பிட்டு விட்டு, நேராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். பல்லவர்களால் 1053ல் கட்டப்பெற்ற புராதனக் கோயில் இது. பெருந்தேவி தாயாருடன் ஸ்ரீவரதராஜப் பெருமான் இருக்கிறார். மிகப் பெரிய கோயில். பல இடங்களில் நிறையப் படிகள் ஏறி, இறங்கவேண்டும். இங்குதான் தங்கப் பல்லி,  வெள்ளிப் பல்லி உள்ளன. ஸ்ரீவரதராஜப் பெருமாள

கல்யாண சமையல் சாதம் ...

நேற்று மாலை ஒரு கல்யாண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்னால் இன்னொரு வரவேற்பிற்கு. இரண்டு விழாக்களிலும் பல ஒற்றுமைகள் கண்டேன். கல்யாணத்திற்கு முதல் நாள் மாலையே வரவேற்பு. கூட்டமான கூட்டம். உணவருந்தும் கூடம் மிகச்சிறியது. முதல் பந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு காத்திருந்த அடுத்த பந்தி! சாப்பிட்ட இலைகளை எடுப்பதற்கு முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டிய கட்டாயம். காலத்தின் கோலம். ஒருவழியாக பந்தியில் அமர்ந்து விட்டீர்களா? கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். இதோ - பரிமாற வந்துவிட்டார்கள். வரவேற்பு உணவு வகைகளும் வித்தியாசம் ஏதும் இல்லாமல் ஒரே மாதிரியாக ஆகிவிட்டன; பாதி அல்லது கால் (1/4) ருமாலி ரோட்டி (நாங்களெல்லாம் பஞ்சாபி உணவுதான் சாப்பிடுவோம், தெரியுமா?), ஒரு டேபிள்ஸ்பூன் குருமா, ஒரு டீஸ்பூன் பச்சடி (மன்னிக்கவும், ராய்த்தா). ஒரு சிறிய ரசக் கரண்டி புலவ், இன்னொரு ரசக் கரண்டி சாம்பார் சாதம். கோஃப்தா ஒன்று, ஒரு ரசக் கரண்டி தயிர் சாதம். சாப்பிட்டாச்சா? எழுந்திருங்கள், அடுத்த இலையை எடுத்தாகி விட்டது, பே