Skip to main content

Posts

Showing posts from March, 2010

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை

ஸ்ரீ ஸத்யநாராயணன் என்பது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இன்னொரு பெயர். இந்த வ்ரதத்தை அனுஷ்டித்து பூஜை செய்யும் முறைகளை ஸ்காந்த புராணம் விவரிக்கிறது. எப்போது செய்யலாம்? பௌர்ணமியன்று ஸாயங்காலம் இந்த வ்ரதத்தை அனுஷ்டிப்பது உசிதம் என்கிறது ஸ்காந்த புராணம். பௌர்ணமியன்று செய்ய இயலாவிட்டால், அமாவாஸை, அஷ்டமி, த்வாதஸி திதிகளிலும், ஞாயிறு, திங்கள், வெள்ளிக் கிழமைகளிலும், ஸங்க்ராந்தி, தீபாவளி தினங்களிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்யலாம். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என நிறைய பேர்களை பூஜைக்கு அழைத்து உபசாரம் பண்ண வேண்டும். தேவையான சில முக்கிய ஸாமான்கள். ஸ்ரீ ஸத்யநாராயணன் படம் தேவை. மூன்று கலஸங்கள் (அல்லது ஒரு குடம்) நவக்ரஹ பூஜைக்கு வேண்டிய வஸ்திரங்கள், தானியங்கள் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் புஷ்பங்கள் (நிறைய தேவைப்படும்) 9 கிண்ணங்கள். அரிசி மற்ற, வழக்கமான பூஜை ஸாமான்கள். நிவேதனம் சால்யன்னம் (வெள்ளை சாதம்) க்ருதகுல பாயஸம் (பருப்பு பாயஸம்) மாஷாபூபம் (உளுந்து வடை) குடாபூபம் (அப்பம்) லட்டுகம் (இட்லி) சுண்டல் மோதகம் வாழை, இலந்தை, நாவல், கொய்யாப் பழங்கள். ரவா கேஸரியும் செய்யல

ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்  ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸத்தை (09-11-2009) ஆரம்பித்து, இன்று 100-வது நாள். விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்ணனின் கதையமுதத்தை பருக, பருக பக்திப் பரவசமும், ஆனந்தமும் கூடுகின்றன. எல்லாருக்கும் கண்ணனின் நல்லருள் கிடைக்கட்டும். ராஜப்பா 11:00 காலை 26-03-2010

Maiya's Restaurant

இன்று (4-3-2010) நான் Maiya's என்ற உணவகத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது பெங்களூரில், ஜயநகர் 4th Blockல் பஸ் ஸ்டாண்ட் அருகில், கணேஷ் கோயிலுக்கு எதிரில் உள்ள 5-மாடி உணவகம். பெங்களூரின் “உணவு ஆலயமான” MTR Restaurant-ஐ சேர்ந்தது. ஏப்ரல் 2009-ல் இது BTM Layout-லிருந்து இங்கு மாற்றப்பட்டது. புகழ்பெற்ற MTR-ன் “வாரிசு” என்பதால், பெங்களூர் வாசிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பு. விஜயா, நீரஜா, நீரஜாவின் அம்மா, அப்பா, அஷோக், மற்றும் நான் ஆறு பேர் நேற்றிரவு (மார்ச் 3) இங்கு உணவு உட்கொள்ள சென்றோம். ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கொஞ்சம் அசிரத்தையாகவே நான் நுழைந்தேன். 2-வது மாடியில் உணவுக் கூடம். நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அங்கு அமைதி நிலவியது. முதல் ப்ளஸ் பாயிண்ட். பணிவுடனும், புன்சிரிப்போடும் எங்களை கூட்டிப் போய் உட்கார வைத்தார்கள். ப்ளஸ் பாயிண்ட் 2. கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போகாத குறைதான் !! தட்டு வந்ததும் வராததுமாக, ஒரு வெள்ளி டம்ள ரில் ( ஆமாம், வெள்ளி டம்ளர்! ) தேன் கலந்த appetizer கொடுத்தார்கள். (இது MTR வழக்கமாம்). மிக ருசியாக இருந்தது. பின்னர் அருமையான no