Skip to main content

Posts

Showing posts from January, 2010

சென்னை சங்கமம் - 2010

சென்ற 6 நாட்களாக சென்னையில் பல இடங்களில் நடந்துவந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நேற்றோடு (16-01-2010) நிறைவு பெற்றன. பெஸண்ட்நகர் எல்லியட்ஸ் பீச்சில் இந்த நிறைவு விழாவிற்காக காலையிலிருந்தே பிரம்மாண்டமான தடபுடலான ஏற்பாடுகள் துவங்கின. விஜயாவும் நானும் இரவு 8 மணிக்கு பீச்சிற்குச் சென்றோம்; நிறய கூட்டம். மேடையில் கிராமிய நடனங்கள் FOLK DANCES . பொதிகை டீவியில் வைத்தால் அந்த டீவி பக்கமே போகாதவர்கள், இங்கு மட்டும் எப்படி “ரசிக்கிறார்கள்”? என்று வியந்து போனேன். நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லிய பின்னர், வாண வேடிக்கைகள் FIREWORK DISPLAY ஆரம்பித்தன. அடுத்த 10-12 நிமிஷங்களுக்கு வானமே வண்ணமயமானது; நன்றாக இருந்தது. 9-30 மணிக்கு முடிவுற்றது. வீடு திரும்பினோம். பீச் ரோட்டில் இருபது, முப்பது “சாப்பாட்டுக் கடைகள்” வைத்திருந்தனர். ஏராளமானோர் கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரோடு முழுதும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், டம்ளர்கள் என அசிங்கம். இன்று காலை 7 மணிக்கு walking போகும்போது பார்க்கிறேன் – அதே ரோடு எல்லா CUTOUTகளும் நீக்கப்பெற்று, சுத்தமாகக் காணப்பட்டது; இரவு முழுதும் வேலை செய்திரு

கோயில்கள்

சென்ற ஒரு மாதமாக மார்கழியில் அருகிலுள்ள ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலுக்கும் மட்டுமே சென்று கொண்டிருந்தேன். தற்போது, தை பிறந்து விட்டது (இன்று தை 2). காலை 7 ம்ணிக்குக் கிளம்பி, நடையாகவே ஆறுபடை முருகன் கோயிலுக்கு ச் சென்றேன். வீட்டிலிருந்து 25 நிமிஷங்கள் ஆகிறது. ஒரு வருஷத்திற்கும் மேலாக இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. Coastal Road வழியாகச் செல்லவேண்டும். ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன், பழனி ஆண்டவன், திருத்தணி முருகன், திருச்செந்தூர் செந்திலாண்டவன், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர்ச்சோலை முருகன் ஆகிய ஆறு முருகப்பெருமான்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருப்பதால், இந்தக் கோயிலில் சாதாரணமாக கூட்டம் வராது. மாலை 5 ம்ணிக்கு நானும், விஜயாவும் நடையாகக் கிளம்பி, திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு ச் சென்றோம்; 37 நிமிஷங்கள் ஆயிற்று. இன்று “மாட்டுப் பொங்கல்” – எனவே கோயிலில் உள்ள பசுக்களுக்கு விசேஷ பூஜைகள் பண்ணினார்கள். ஸ்வாமியையும், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனையும தரிஸித்துக் கொண்டு வீடு திரும்பினோம் (பஸ்ஸில்). காலையிலும், மால

மார்கழி 2010

இந்த வருஷம் (2009-2010 விரோதி) மார்கழி மாஸம் 2009 டிஸம்பர் 16ஆம் தேதியன்று பிறந்தது. முதல் நாள் நான் அருகிலுள்ள ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலுக்குப் போனேன் என்றாலும், அடுத்த ஒன்பது நாட்களுக்குப் போகமுடியவில்லை – உடல் நலம் சரியாக இல்லாததால் காலை வேளைகளில் வெளியே கிளம்பவே முடியவில்லை. மீண்டும் டிஸ 27-ஆம் தேதிமுதல் போக ஆரம்பித்தேன். 0415க்கு அல்லது 0430க்கே எழுந்து குளித்து, என்னுடைய வழக்கமான பாராயணங்களை சொல்லிவிட்டு, ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸம் முடிந்ததும் 0645க்கு செல்வேன். ஸ்வாமி தரிஸனத்திற்குப் பிறகு சுடச்சுட வெண்பொங்கல் கிடைக்கும். ஈஸ்வரன் கோயிலிலிருந்து ஸ்ரீவரஸித்தி விநாயகர் கோயிலுக்குச் செல்வேன்; பிறகு வீடு. டிஸம்பர் 30ஆம் தேதி முதல் விஜயாவும் வர ஆரம்பித்தாள்; காலை 0515க்கு எழுந்து, குளித்து, பாராயணம் சொல்லிவிட்டு அவளும் என்னுடன் தினமும் வர ஆரம்பித்தாள். இந்த வழக்கம் மார்கழி முழுதும் நீடித்தது. தினமும் காலையில் சரோஜா அக்காவை கோயிலில் சந்திப்போம். அவள் தன் வீட்டிற்கு கிளம்பியதும் நாங்கள் விநாயகர் கோயிலுக்கும் சென்று விட்டு, வீடு திரும்புவோம். தினமும் பொங்கல் பிரஸாதம் கிடைக்கும். இத

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் - ஸ்ரீமதி விஷாகா ஹரி Vishakha Hari

வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் சரித்திரம் யாவரும் அறிந்த ஒன்று. 8ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் விஷ்ணுசித்தர் என்னும் ஒரு அடியார் வசித்து வந்தார். தன்னுடைய தோட்டத்திலிருந்து தினமும் பூக்கள் பறித்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதே அவரது தொண்டாக இருந்து வந்தது. ஒரு நாள் பூப்பறிக்க சென்றபோது, ஒரு துளஸி செடியின் கீழ் ஒரு குழந்தை இருக்கக் கண்டார். குழந்தை பாக்கியம் இல்லாத விஷ்ணுசித்தர் தமபதியினர், இந்தக் குழந்தையை மிக மகிழ்ச்சியுடன் வளர்க்க ஆரம்பித்தனர். “பூமி மாதாவின் கருணை”யினால் கிடைத்த குழந்தைக்கு “கோதை” எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்தனர். விஷ்ணுசித்தர் பெரும் விஷ்ணுபக்தராதலால் அவர்கள் வீட்டில் எப்போதுமே ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பற்றிய பாடல்களும் கதைகளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஆண்டாள் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணர் மேல் பக்தியும் ப்ரேமையும் கொள்ள ஆரம்பித்தாள். நாளடைவில் இந்த ப்ரேமை கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளும் காதலாக மாறியது. விஷ்ணுசித்தர் தற்போது பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார். அவர் ஆண்டாளுக்கு பாவை நோன்பைப் ப