Skip to main content

Posts

Showing posts from May, 2009

ஊறுகாய்கள் பலவிதம் ...

சீஸனுக்கு ஏற்றவாறு ஊறுகாய்கள் போடுவதில் விஜயா மிகவும் திறமைசாலி. முன்வைத்த காலை பின்வாங்காமல் “கருமமே கண்ணாயினார்” என்பதற்கேற்ப எப்படியும் ஊறுகாய்களை போட்டுவிடுவாள். # 1 மாவடு வெயிற்காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாஸத்தில் தெற்கு மாடவீதியில் மாவடுக்கள் கொட்டி இருக்கும். அந்தக் கடைகளைத் தாண்டி செல்லும்போது அவள் கண்கள் மின்னும். முதலில் சில நாட்கள் சும்மா பார்த்து விட்டு, ஒரு நாள் திடீரென முடிவெடுப்பாள். அன்று வாங்கிவிடுவாள். அன்றிரவே ஊறுகாய்க்கான ஆரம்ப வேலைகள் நடக்கும். அடுத்த 5-ஆம் நாள் தயிர் / மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாவடு கிடைக்கும். இந்த வருஷம் (2009) மார்ச் 25-ஆம் தேதியன்று 5 படி (ரூ 20 / படி வீதம்) வாங்கி ஊறுகாய் போட்டாள்; பின்னர் ரமாவிற்கும் 5 படி வாங்கி ஹைதராபாத் அனுப்பினாள். # 2. ஆவக்காய் அருண், அர்விந்த், அஷோக், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சூடான சாதத்தில் ஆவக்காயைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் .... ஓ! நல்ல வெயில் காலத்தில்தான் மாங்காய்கள் கிடைக்கும். வழக்கமாக, கிருத்திகாவின் பெற்றோர் வீட்டிலிருந்து (அவர்கள் வீட்டில் மாமரம் உள்ளது) காய்கள்

ஸ்ரீ புரந்தர தாசர் சரித்ரம் Sri Purandaradasar Charithram

ஸ்ரீமதி விஷாகா ஹரியை (Smt VISHAKHA HARI) யாவரும் அறிவீர்கள். ஸீதா கல்யாணம் , ஸுந்தர காண்டம் , ப்ரஹ்லாத சரித்ரம் ஆகியவைகளுக்கு அடுத்து தற்போது இவர் “ஸ்ரீ புரந்தரதாசர் சரித்ரம்” என்னும் கதாகாலட்க்ஷேபத்தை DVD வடிவில் கொடுத்துள்ளார். ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கே உரித்தான அந்த இனிமைக் குரலில் ஸ்ரீ புரந்தரதாசரின் சரித்திரத்தை பாட்டாகவும் வசனமாகவும் அளித்துள்ளார். அருமையாக உள்ளது. பாண்டுரங்க விட்டல் மீதான பக்தி இன்னும் சுவை சேர்க்கிறது. கர்னாடக சங்கீதத்தின் “பிதாமகர்” என்று போற்றப்படுபவர் ஸ்ரீ புரந்தரதாசர். இவர் 4 லக்ஷத்திற்கும் அதிகமாக ஸ்வராவளிகள், ஜண்டைவரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள், கீர்த்தனைகள் ஆகியவைகளை இயற்றியிருக்கிறார். மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூரிலுள்ள, ஸ்ரீ பாண்டுரங்கனை (விட்டலை) இவர் துதித்து நாமசங்கீர்த்தனம் பண்ணியிருப்பது மிக விசேஷமானது. பெல்லாரி ஜில்லாவில் ஹம்பிக்கு அருகில் புரந்தரகாட் என்னும் சிற்றூரில் வரதப்பா நாயக்கர் - கமலாம்பாள் தமபதியருக்கு சீனிவாச நாயக்கனாக இவர் 1484ல் பிறந்தார். நிறைய சங்கீத ஞானமும், மொழியறிவும் கொண்டவர். லக்ஷ்மிபாய் (சரஸ்வதிபாய்??) என்பவரை மணந்தார்.

சென்னை மாநகர பேருந்துகள்

CHENNAI BUSES நேற்று வியாழன் 30-04-2009 மாலை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். A1 சொகுசு பஸ். கண்டக்டரிடம் 50 ரூபாய் தாளை நீட்டி “மந்தைவெளி ரெண்டு” என்றேன். “சார், டிக்கெட் 6 ரூபாய்தான், 6 ரூ கொடுங்க,” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சொகுசு பஸ்ஸில் சென்ட்ரல் - மந்தைவெளி ஒரு ஆளுக்கு 7.50, ”இவர் என்ன 3 ரூ என்கிறாரே, சரியாகக் கேட்கவில்லையோ” என நினைத்து, “மந்தைவெளி ரெண்டு” என மீண்டும் அழுத்தி சொன்னேன். “மந்தைவெளிக்கு 3 ரூபாய்தான் சார்,” ஒரு புன்னகையுடன் பதில் வந்தது. பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே ஒரே ஆச்சரியம், கண்டக்டர் என்ன, பணத்தை திருப்பிக் கொடுக்கிறாரே என்று கையிலுள்ள டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், கண்களை நம்ப முடியாமல். விசாரித்ததில், நேற்று விடியற்காலை தமிழக அரசு பஸ் டிக்கெட் fare-களை திடீரென குறைத்துவிட்டதாம். வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, M சீரிஸ், LSS, Express, மிதவை, சொகுசு என விதவித ரேஞ்சுகளில் ஓடிக்கொண்டிருந்த சென்னை மாநகர பஸ்கள் நேற்று காலை முதல் “நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு” என எல்லா பஸ்ஸுகளும் இனி ஒரே ரேட்ட