Skip to main content

Posts

Showing posts from July, 2009

திருப்பாதிரிப்புலியூர் கோயில்கள் Amma 100th Birthday, 23Mangalam, Gopi July 2009

இந்த வருஷம் (2009), ஜூலை 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும் திருப்பாதிரிப்புலியூர் சென்றோம். அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கும், ஸ்ரீ பாடலீஸ்வரர்க்கும், ஸ்ரீ ப்ருஹந்நாயகி அம்மனுக்கும் அபிஷேகம் /அர்ச்சனை செய்வதாக திட்டம். வரும் ஆகஸ்ட் 14, 2009 ஆடிக்கிருத்திகை அன்று அம்மாவிற்கு (ஸ்ரீமதி சம்பூரணம் அம்மாள்) 100-வது பிறந்தநாள் வருவதை ஒட்டி தானதர்மங்களும், அபிஷேக, அன்னதானங்களும் செய்து அம்மாவின் நினைவை கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம். அபிஷேகங்கள் / அர்ச்சனைகளை சென்னையில் செய்வதை விட, அம்மா 35 வருஷங்களுக்கு மேல் வசித்த திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் செய்தால் இன்னும் நிறைவாக இருக்குமே எனத் தோன்றியது. திடீரெனத் தோன்றிய இந்த எண்ணத்தை விரைவாக செயல்படுத்தினோம். ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடித்தேன். அர்விந்த் தன் காரை எடுத்துப் போகுமாறு சொன்னான். முதலில் அருணைத்தான் கார் கேட்டிருந்தேன்; அவனும் தர ஒப்புக்கொண்டிருந்தான்; இடையில் அர்விந்த் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், அவனது காரையே பயன்படுத்தினோம். சாவித்திரியை வருகிறாயா என அழைத்தேன்; சந்தோஷமாக சம்மதித்தாள்; மங்களமும் அவ்வாறே ச

அடையாறு பூங்கா Adyar Poonga

அடையாறு பூங்கா சென்னை நகரின் இரண்டு நீர்வழிப் பாதைகளான கூவம் மற்றும் அடையாறு நதிகள், கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. இந்த 2 ஆறுகளிலும் கழிவு நீர் மிகப்பெரிய அளவில் கலப்பதால், ஆற்று நீரும், அதன் சுற்றுப்புற சூழலும் மிக மோசமாக உள்ளன. இந்த சீர்கேட்டை மாற்றுவதற்காக எடுக்கப்பட்டு வரும் தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டம் - அடையாறு பூங்கா. அடையாறு கடலில் கலக்குமிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரையில் உள்ள 358 ஏக்கர் இடம் அடையாறு கழிமுக பகுதியாகும். இதிலும், செட்டிநாடு அரண்மனையிலிருந்து, பட்டினப்பாக்கம் வழியாக மந்தைவெளிப்பாக்கத்தில் முடியும் 58 ஏக்கர் பரப்பை மேம்படுத்தி அடையாறு பூங்காவாக ஆக்குவது குறிக்கோள். கடல்சூழ் நீர்- சதுப்பு நிலப்பரப்புகளில் வாழும் இந்திய அல்லது வெளிநாடுகளிலிருந்து வரும் 200-க்கும் மேலான பறவை இனங்கள் வேகமாக அழிந்து வரும் (extinct) ஆபத்தான நிலையில் உள்ளன. இந்தப் பறவைகள் வந்து தங்குவதற்காக பூங்காவின் சதுப்பு நிலங்களை அகழ்ந்து உப்புநீர் பரப்பாக ஆக்கியுள்ளனர். இந்த நீர்ப் பரப்பில் தற்போது வெள்ளை நிற கொக்குகளும், கறுப்பு நிற வாத்துக்களும் காணப்படுகின்ற

Sri Ramajayam Naama

நேற்று (06-07-2009) காலை 8 மணி அளவில், விஜயாவும் நானும் மாம்பலம் சென்றோம். லஸ்ஸிலிருந்து 12G பஸ்ஸில் அங்கு போனோம். (உமா) சுந்தரின் அண்ணா முரளீதரனின் மகனுக்குக் கல்யாணம். மங்களமும், கோபியும் எங்களுடன் 12G யில் வந்தனர். வழக்கமான காலை சிற்றுண்டி, மதிய உணவிற்குப் பின், அங்கிருந்து கிளம்பினோம். இடையில், மாம்பலம் விநாயகர் தெருவிலுள்ள ஸ்ரீராம் மந்திருக்கு சென்றோம்; ராமமூர்த்தி அத்திம்பேர், கோபி, மங்களமும் வந்தனர். இந்த இடத்தில் “ஸ்ரீராம நாம வங்கி” உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் பலரும் எழுதும் ஸ்ரீராமஜெயம் நாம நோட் புஸ்தங்களை இங்கு சேமித்து வருகின்றனர். இது (ஜூன் 2009) வரை 500 கோடி நாமாக்கள் சேர்ந்துள்ளன. அழகாக, பத்திரமாக இவற்றை பாதுகாத்து வைத்துள்ளனர். எண்ணிக்கை 1000 கோடியானதும், எல்லாவற்றையும் அடித்தள்த்தில் வைத்து, மேலே ஸ்ரீராமனுக்குக் கோயில் கட்ட எண்ணியுள்ளார்கள். 2011 ஆரம்பத்தில் இது நடக்கும் எனச் சொன்னார்கள். பார்க்க பரவசமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் ஸ்ரீராமஜெயம் நாமா எழுதிய புஸ்தகங்கள் இருந்தால், அவற்றை இங்கு கொண்டு வந்து கொடுத்து 1000 கோடி முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள்.