Skip to main content

Posts

Showing posts from January, 2008

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் - பகவத் கீதை Sri Velukkudi krishnan

சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு சென்றிருந்தோம். அங்கு இரண்டு பெரிய போஸ்டர்களை பார்த்தோம், படித்தோம். யாரோ ஒரு "வேளுக்குடி கிருஷ்ணன்" (Sri Velukkudi Krishnan) என்பவர் தினமும் பொதிகை டிவியில் காலை 6-30 முதல், 6-45 வரை பகவத் கீதை (Bhagavad Gita) உபன்யாசம் செய்ய இருக்கிறார் எனப் படித்தோம். அப்போது இந்த ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. காலையில் எழுந்து ஒரு நாள் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்துக் கொண்டோம். 2007, ஜனவரி 18, வியாழக்கிழமையும் வந்தது. 6-15க்கு எழுந்துகொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டோம்; 6-30 ஆயிற்று. வேளுக்குடி வந்தார். கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். என்ன ஒரு கம்பீரமான குரல்! தெளிவான நடை. இனிய, எளிய தமிழ் தங்குதடையின்றி நீரோட்டமாக ஓடி வருகிறது. மேற்கோள் காட்ட பலப்பல பாசுரங்கள், ஸ்லோகங்கள். மகுடி கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அது போன்று நானும், விஜயாவும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனின் (Velukkudi Krishnan) பரம ரசிகர

ஸுந்தர காண்டம் Vishakha Hari

"கண்டேன் ஸீதையை" ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் ஸுந்தர காண்டம் பிரசித்தி பெற்றது. ஸ்ரீராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மைப் பக்தியும் வாய்க்கப் பெற்றுள்ள ஹநுமானின் வீரச்செயல்கள் இக்காண்டத்துள் மிக விரித்துக் கூறப்பட்டுள்ளன். மொத்தம் 68 ஸர்க்கங்கள் கொண்டது. ஹநுமான் சமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்கு போனதிலிருந்து ஆரம்பிக்கிறது. மஹேந்திர பர்வதத்திலிருந்து கிளம்பி, மைநாக பர்வதத்தை தாண்டி, அரக்கி ஸூரஸையின் வாயில் நுழைந்து புறப்பட்டது, அரக்கி ஸிம்ஹிகையை அழித்து லங்கை சென்றது - அங்கு ஸீதையைத் தேடியது, அசோக வனத்திற்கு சென்றது, அங்கு ஹநுமான் ஸீதையைக் கண்டது, ஸீதையின் கஷ்டத்தைப் பார்த்து துக்கம் கொண்டது, பின்பு ஹநுமான் ஸ்ரீராம காவியத்தை ஆரம்பத்திலிருந்து பாடியது, ஸ்ரீராமனுடைய கணையாழியை ஸீதையிடம் அளித்தது, ஸீதை தன்னுடைய சூடாமணியை ஸ்ரீராமருக்குக் கொடுத்தது, ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தது, நிறைய அரக்கர்களை அழித்துக் கொன்றது, ராவணன் சபைக்குச் சென்று அவனுக்கு உபதேசம் செய்தது, ஆஞ்சநேயரின் வாலில் அரக்கர்கள் தீ வைத்தது, அந்த தீயினிலாயே லங்கையை அழித்தது, பின்னர் ராமனிடம் திரும்பி வந்து "