Skip to main content

Posts

Showing posts from 2008

ஹோட்டலில் சாப்பாடு Hotel Meals

ஹோட்டலில் சாப்பாடு - Hotel Amavaravathy, TTK Road ரொம்ப நாளாகவே ஹோட்டலுக்குப் போக வேண்டும், முழு சாப்பாடு சாப்பிட வேண்டும் என ஆசையாக இருந்தது. சமீபத்தில், அக்டோபரில் கோயம்பத்தூரில், ஊட்டியில் சாப்பிட்டோம் என்றாலும், சென்னையில் சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை - அதுவும் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட ஆசை. டிச 27 (சனிக்கிழமை) காலை இந்த என் எண்ணத்தை சொன்னவுடன், அர்விந்த், விஜயா ஆகியோர் உடனே ஒத்துக் கொண்டனர். அஷோக்கும், நீரஜாவும் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருந்தார்கள். அவர்களும் வர சம்மதித்தனர். அவர்கள் அருண் வீட்டிலிருந்து, காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை அழைத்துக் கொண்டு அருண் காரில் வருவதாக சொன்னார்கள். 7 பேரும், 3 குழந்தைகளுமாக இரண்டு கார்களில், ஹோட்டல் அமராவதி க்குச் சென்றோம். ஆழ்வார்பேட்டை TTK வீதியில், ம்யூசிக் அகாடெமி அருகில் உள்ளது இது. ஆந்திரா சாப்பாட்டிற்கு இது புகழ்பெற்றது. ஆந்திரா பருப்பு சாதத்தில் ஆரம்பித்து, கீரை, சாம்பார், காரக்குழம்பு, ரசம், 2 வித பொரியல், பருப்புப் பொடி, அப்பளம், வடாம், தயிர், கோங்கூரா சட்டினி, ஆவக்காய் ஊறுகாய், ஜாங்கிரி, வாழைப்பழம், பீடா என சாப்பாடு

Pancharathna Keerthanai Mahathmiyam - VISHAKHA HARI

பஞ்சரத்ன கீர்த்தனை மஹாத்மியம் - விஷாகா ஹரி டிசம்பர் 25-ஆம் தேதி (2008) காலை 10 மணிக்கு மயிலாப்பூரில் விஷாகா ஹரியின் (VISHAKHA HARI) உபன்யாஸம். கூட்டம் வரும் என்பது தெரிந்த விஷயமாதலால், காலை 8-30க்கே அங்கு போய்விட்டோம். அப்போதே முதல் 20 வரிசைகள் நிரம்பிவிட்டன. 10 மணிக்கு உபன்யாஸம் ஆரம்பித்தது - தியாகராஜ ஸ்வாமிகளின் "பஞ்ச ரத்ன கீர்த்தனை மஹாத்மியம்" என்ற தலைப்பில். இந்த பஞ்சரத்ன கீர்த்தனைகள் ப்ற்றி யாவரும் அறிந்ததே. தியாகராஜ ஆராதனையில் ஆண்டுதோறும் பாடப்படுவது. மொத்தம் 5 கீர்த்தனைகள். ஒவ்வொரு கீர்த்தனையாகப் பாடி, அதன் மஹாத்மியத்தை விளக்கிக் கூறினார். முதல் கீர்த்தனை - "ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என ஆரம்பிக்கும், ஸ்ரீராமரைக் குறித்த பாட்டு. ஸ்ரீராம சரித்திரத்தையே சுருக்கமாக விஷாகா ஹரி சொல்லி (பாடி) முடித்தார். ஸ்ரீராமனின் குணவிசேஷங்களை விவரிக்கும் கீர்த்தனை. மிக நன்றாக இருந்த்து. 2-வது - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல். "மானிட ஜன்மம் கிடைத்தற்கு அரியதென்று பரமானந்தம் அடையாமல், மதம், பொற

மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் ... marghazhi

" மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் " (அத் 10 ஸ்லோ 35) என்று மாதங்களில் மார்கழியை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சிறப்பித்துக் கூறியுள்ளார். மார்கழி என்றதுமே ஆண்டாளும், திருப்பாவை பாசுரங்களும், கண்ணனும் நினைவுக்கு வரும். (சுடச்சுட பொங்கலுக்கு விடியலில் சீக்கிரமே கோயிலுக்குப் போக வேண்டுமாதலால், நிறையப் பேரால் ஆசையிருந்தும் அது முடிவதில்லை என்பது வேறு விஷயம்.) திருப்பாவையில் கண்ணன் ஆண்டாளுக்கு அன்பனாக வருகிறான்; கீதையில் அர்ஜுனனுக்கு நண்பனாக, உபதேஸம் செய்யும் கீதாசாரியனாக வ்ருகிறான். ஆண்டாள் காட்டிய பக்திக்கும், அர்ஜுனன் காட்டிய பக்திக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் உண்டு. உங்களுடன் ஸ்கூலில் 1-வது முதல் 10-வது வரை ஒன்றாகப் படித்து பின்னர் வேறு ஊருக்கு மாறிவிட்ட உங்கள் பாலிய வயது ஸ்நேகிதன் முப்பது ஆண்டுகள் கழிந்து திடீரென சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாக உங்கள் முன் வந்தால், அவனை (அவரை?) எப்படி கூப்பிடுவீர்கள்? அவனுடன் (அவருடன்) எப்படி பழகுவீர்கள்?? ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கப்போன ஸுதாமாவின் மனநிலை போன்று இருக்குமா? இதே DILEMMA நிலைதான் ஆண்டாளுக்கும் இருந்தது; அர்ஜுனனுக்கும் இருந்தது. இருவரும் எப்பட

மஹாகவி பாரதியார் - Bharatiyar

மஹாகவி பாரதியார் . A Tribute by Smt NITHYASRI MAHADEVAN நேற்று (11-12-2008) மஹாகவியின் 126வது பிறந்தநாள். பாரதியாரைப் பற்றி புதிதாக எழுத, சொல்ல என்ன இருக்கிறது ?! நேற்று செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூல் குமார ராஜா முத்தையா செட்டியார் அரங்கில் ஸ்ரீமதி நித்யஸ்ரீ மஹாதேவன் பாரதியார் பாடல்கள் சிலவற்றைப் பாடினார். மஹாகவியின் இனிய பாடல்களை நினைவுகூர ஒரு இனிய் வாய்ப்பாக இது அமைந்தது. (அரங்கைப் பற்றிய விவரம்) கூட்டத்தை எதிர்பார்த்து, நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கே அரங்கில் இருந்தோம். 6-30 க்குத்தான் நித்யஸ்ரீ தன்னுடைய இன்னிசையை துவங்கினார். "பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத் தால் " என்று துவங்கும் பாரதமாதா திருப்பள்ளி யெழுச்சி பாடலுடன் கச்சேரி ஆரம்பமாகியது. " மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ " என பாரதத்தாயை வணங்கி பள்ளியெழுச்சி பாடும் பரவசப் பாடல். அரங்கே அமைதியில்; இன்னிசையில் கட்டுண்டோம். அடுத்து வந்தது, " வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்; வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்" என்ற கேட்கக் கேட்கத் திகட்டாத ஸரஸ்வதி தேவியின் புகழ். ஒரு முறை இந்தப் பாட்டை ம

குமாரராஜா முத்தையா இசையரங்கம் Chettinad Vidhyashram

குமாரராஜா முத்தையா இசையரங்கம், ராஜா அண்ணாமலைபுரம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (எங்கள் வீட்டிற்கு அருகில்) செட்டிநாடு வித்யாஷ்ரம் (Chettinad Vidhyashram) என்ற புகழ்பெற்ற ஒரு ஸ்கூல் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்களின் வம்சத்தினர் இந்த் ஸ்கூலை நிறுவி, நிர்வகித்து வருகின்றனர். (ஏரியா பெயரே ராஜா அண்ணாமலைபுரம் !!) இந்த ஸ்கூலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 15 வரை தினம்தினம் கர்னாடக இசைக்கலைஞர்களை கூப்பிட்டு கச்சேரிகள் நிகழ்த்துகிறார்கள். பாடுபவர்கள் எல்லாருமே மிகப் புகழ்பெற்றவர்கள் ! அனுமதி இலவசம் . பல கச்சேரிகளுக்கு கூட்டம் அலைமோதும். தொட்டுவிடும் தூரத்தில் உள்ள வங்கக்கடலுக்குப் போட்டியாக இங்கும் ரசிகர்கள் கடல் இருக்கும். 6-30 மணிக்கு ஆரம்பமாகும் கச்சேரிக்கு 4-30 மணிக்கே கூட்டம் பிதுங்கி வழியும். (இது எல்லா கச்சேரிகளுக்கும் பொருந்தாது.) பெரிய்ய பார்க்கிங் ஏரியா. நிறைய கார்களை தாராளமாக நிறுத்தலாம். இருந்தும், சில கச்சேரிகளுக்கு வரும் கார்கள், இந்த பார்க்கிங்கும் போதாமல், துணை ரோடு, மெயின் ரோடு .... என கார்கள் நிறுத்தவே இடம் போதாது. (இந்த கார்களில் வருபவர்களுக்கு எதற்கு அனுமதி இ

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் Velukkudi Krishnan Swamigal

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் தினந்தோறும் காலை 6-30 முதல் 6-45 வரை தெள்ளிய தமிழில் கீதை உபன்யாஸம் செய்து வருவது (பொதிகை டிவியில்) தெரிந்ததே. 2007 ஜனவரி 18 ஆம் தேதி வியாழனன்று உபன்யாஸம் துவங்கியது. இரண்டு வருஷங்கள் ஆகப்போகின்றன. இவரைப்பற்றியும் இவரது கீதை உபன்யாஸத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் 02-01-2008 அன்றும், 18-01-2008 அன்றும் எழுதியுள்ளேன். முதல் பதிவு இங்கேயும் , அடுத்தது இங்கேயும் படிக்கவும். இந்த 2008 டிசம்பர் 12 வெள்ளியன்று அவரது 500வது சொற்பொழிவு! கீதையின் 12வது அத்தியாயம் முதல் ஸ்லோகம் சொல்லுகிறார். 500 சொற்பொழிவுகளில் 475 க்கும் மேலாக விஜயாவும் நானும் விடாமல் கேட்டுக்கொண்டு வந்துள்ளோம். முதலில், இரண்டு நாட்கள் குளிக்காமல் கேட்ட நான் பின்னர் 6 மணிக்கு தினமும் குளித்துவிட்டு கேட்க ஆரம்பித்தேன். 6 மணிக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக 5-45, 5-30, 5-00 மணியென சீக்கிரமாக எழுந்துகொண்டு உடனே குளித்து ... என மாறியது. சென்ற இரண்டு மாதங்களாக இது 4-30 அல்லது 4-45 என இன்னும் சீக்கிரமாக மாறியுள்ளது. இந்தமாதிரி ஒரு நியமமும், மனக்கட்டுப்பாடும் எனக்கு எப்படி வந்தது? யார் அருளியது? ஸ்ர

The ONE and ONLY SUJATHA

கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா சுஜாதாவின் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதே, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நல்நோக்கில் இதோ .... கடவுள்களின் பள்ளத்தாக்கு . "திவ்ய தேச க்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்யக் குதூகலமுள்ள பக்தர்களுக்கு, அவை சம்பந்தமான சகல விவரங்களையும் தெரிவிப்பதற்கான பத்ரி யாத்திரை விளக்கு" - மேற்கண்ட தலைப்பின் கீழ் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் 40 வருஷங்களுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் போனபோது யாத்திரையில் உள்ள கஷ்ட-சுகங்களையும், தபால் ஆபீஸ் விவரங்கள் உட்பட்ட காட்சிகளையும் சம்ஸ்கிருதமும் தமிழும் மயங்கிக் கலந்த ஒரு வசீகர வசன நடையில் விவரித்திருக்கிறார். 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்... "முதுகு பற்றிக் கைத் தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி, விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டிருமி, இது வென் அப்பர் முத்தவா றென்று இளையவர் ஏசா முன், மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே'" என்று முதுகில் ஒரு கை வைத்துக் குச்சி ஊன்றி இருமிக்கொண்டு, மேல் மூச்சு வாங்கிக்கொண்டு -

KVS Athimber - 10th and 13th Day Rites

Saturday, 29 Nov 2008 Today is the 10th Day after KVS Athimber passed away on 20 Nov. Read This morning we - self, Vijaya, and Arvind - started from our house by 7-30 for Central Stn and Ambattur. As many roads in Chennai were water-logged due to the recent rains, we went by local train. Sugavanam reached a little later (the same train route). The 10th day rites of KVS Athimber started by 9-45 AM. Each one of us offered saatham to KVS Athimber and it was Padma akka who offered it last, with tears in her eyes. Then Rajeswari and Srividya kept bakshanams and Palaharams over the rice. The rites were completed in an hour. Prakash, Rajeswari and Srividya went to immerse the "Pindam". Those who were in the house took bath. After Prakash returned, Padma akka took bath and I gave the sari that all of us brothers purchased for her. Then Prakash gave a sari and finally Pasupati gave a sari. Padma akka wore the sari that we brothers gave her. Then we ate. Caterer_mami brought the foo

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரை யில் (drumstick) நிறைய இரும்புச்சத்து, கால்ஷியம், பொட்டாஷியம் இன்னும் பல தாதுக்கள் நிரம்பியிருப்பதை அறிவோம். மிக முக்கியமான் மருந்து சத்துக்கள் அடங்கியது. ஆனால் --- முருங்கைக் கீரையை வாங்கி அதை "ஆய" ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீண்....டு கொண்டே போகும். காம்புகளை எடுத்து, ஒவ்வொரு இலையாக ஆய்வதற்குள் ... "அப்பாடா" என்று ஆகிவிடும். " ஏண்டா வாங்கினோம் " என்று கூட தோன்றும். ஒருவழியாக (ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குப் பின்னர்) ஆய்ந்து முடித்து, அலம்பி பாத்திரத்தில் போட்டு சமைக்க ஆரம்பித்தால், சமைக்கவும் நீண்....ட நேரம் ஆகும். ஆனால் --- சமைக்கும்போதே கீரையின் மணம் எட்டு ஊருக்கு பரவும். சமைத்த பின்னர் இதன் அளவு மிகவும் கொஞ்சமாக குறைந்துவிடும். 5 - 6 மணி ஆய்ந்த உழைப்பிற்கு பலன் இவ்வளவுதானா எனக் கேட்கத்தோன்றும். ஆனால் --- தட்டிற்கு அது வந்த உடனேயே காலியாகிவிடும். என்ன அருமையான ருசி. எனக்கு மிகவும் பிடித்த கீரை முருங்கைக்கீரை. ப.பருப்பு போட்டு பண்ணும் மசியல், அடைமாவில் ஒரு கைப்பிடி முருங்கை இலையைப் போட்டு அடை வார்ப்பது, நெய் காய்

KVS Athimber - Padma akka another custom

24 Nov 2008 As per the prevalent custom and sampradaayam, we have to bring Padma akka to our houses, since, as sons of GRS - Sampoornam we represent our parents (pirantha veedu). We scheduled this visit today (24 Nov 2008). Vijaya and I left our house in a taxi by 7-45 this morning and went to Ambattur. Takes about 1 1/2 hours' travel. We took Padma akka in the taxi and proceeded to Vadapalani to Jayaraman's house (another 1 1/4 hour). Kalyani and Jayaraman were ready with the lunch. Vasu (delhi) was also there at Vadapalani - he has come to chn yesterday. After lunch and a brief rest (for akka), we left Vadapalani for Thiruvanmiyur. At TVM, Sudha gave Horlicks-milk to Padma and after about 45 minutes, we left in the taxi for our house at Karpagam Avenue. Sugavanam also came to our house. After another Horlicks-milk and 45 minutes' time, Sugavanam took Padma back to Ambattur. Thus, another custom, another tradition has been fulfilled today. rajappa 17:05 on 24

KVS Athimber

K VENKATASUBRAMANIAN ATHIMBER 20 November 2008, Thursday . It was about 1230 noon. Vijaya and I had just returned from Mylapore. Sugavanam called and broke the most shocking and stunning news that our KVS Athimber has passed away by 1130 at Ambattur. I could not believe my ears since Athimber was not suffering from any serious ailment. A rude jolt. Everyone of us was beyond consolation. Vijaya and I started for Ambattur at 1-30PM; Saroja and Ramamurthy Athimber came here at 2-30PM in a taxi and we four left and reached Ambattur by 4-15. Sugavanam, Chandar's parents, Jayaraman, Kalyani, Poornima, Ramesh were already there. Athimber was kept inside the Freezer box. We couldn't control ourselves on seeing his lifeless body. He just looked like he was sleeping, so calm and serene ! Padma akka was uncontrollably crying; so were Prakash and Rajeswari. Can mere words comfort them? It looks KVS athimber had fever for the past 2 days and this morning he was about to be taken to the doct

இன்றைய நாட்குறிப்பு

என்னுடைய இன்றைய 15-11-2008 டைரிக் குறிப்பிலிருந்து .. காலை 04-45 க்கு வழக்கம் போல எழுந்து, குளித்து, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, ஸ்லோகங்கள் சொன்னேன். பின்னர் விஷ்ணு சஹஸ்ர நாமம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, கீதையிலிருந்து 8 - 10 ஸ்லோகங்கள் பாராயணம். 7 மணிக்கு அருகிலுள்ள் MRC Nagar (1 1/2 கிமீ) வரை நடை. திரும்பும் வழியில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் - பதினெட்டு படி ஏறி, ஐயப்பன் தரிசனம். பக்தர்கள் நிறைய பேர் இருந்தனர். சுடச்சுட வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் ப்ரஸாதமாக கிடைத்தது. 8 லிருந்து 8-45 வரை மூன்று ந்யூஸ் பேப்பர்கள். 9 மணிக்கு பூரி-கிழங்கு காலை சிற்றுண்டி. பின்னர், கடைக்குப் போய் முளைக்கீரை வாங்கிவந்தேன். 9-30 முதல் 10-15 வ்ரை வெஜிடபிள் ஸூப்புக்கான தயாரிப்பு ஆரம்பம். பின்னர் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டரில் யாஹூ பார்த்தல். MIP குறித்து ஒரு மெயில் அனுப்பினேன். 11-15க்கு ஸூப் பண்ண ஆரம்பித்தேன்; 11-45க்கு குடித்தோம் - நன்றாக வந்திருந்தது. (ஸூப் செய்முறை இங்கே படிக்கலாம்) 12-15க்கு (ஆர்டர் செய்திருந்த புதிய ) இரண்டு இலவம்பஞ்சு மெத்தைகள் வந்தன - இரண்டும் ரூ. 4100.00 ஆயிற்று. மதியம்

ப்ரஹ்லாத சரித்திரம் - Prahlatha Charithram VISHAKA HARI

ப்ரஹ்லாத சரித்திரம் - ஸ்ரீமதி விஷாகா ஹரி Vishakha Hari. ப்ரஹ்லாதனைப் பற்றிய கதை எல்லாருக்கும் தெரிந்ததே. முதன்முதலில் எனக்கு இந்தக் கதையை யார் சொல்லியிருக்கக்கூடும் என யோசித்துப் பார்த்தேன் - ஞாபகம் வரவில்லை, என் அம்மாவாகத்தான் இருக்கும். முந்தா நாள் சனிக்கிழமை (08-11-2008) மாலை மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, கிரி டிரேடிங் Giri Trading கடைக்குள் நுழைந்தோம். 3-வது மாடியில் ஸ்ரீமதி விஷாகா ஹரியின் புதிய DVD "ப்ரஹ்லாத சரித்திரம்" ( Moser Baer, Rs 99.00 ) இருந்தது. உடனே வாங்கினேன். அதை நேற்று (09-நவம்பர்) ஞாயிற்றுக்கிழமைக் கேட்டோம். சுமார் 2 1/2 மணி நேரம், தெய்வீக அனுபவம். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் " ப்ரஹ்லாத பக்தி விஜயம் " என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. விஷாகாவின் இனிய குரலில், " வாசுதேவா, வாசுதேவா " என்ற தெவிட்டாத பாட்டுடன் ஆரம்பிக்கிறது. நான்கு கனகாதிகள் (ஸாதுக்கள்) வைகுண்டம் செல்லும்போது, அங்குள்ள ஜெய, விஜய என்ற த்வார பாலகர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். கோபம் கொண்ட ஸாதுக்கள் "மூன்று ஜன்மங்களுக்கு அசுரர்களாக பிறக்கக் கடவத

VISHAKHA HARI - Tyagaraja Ramayanam

Vishakha Hari - Tyagaraja Ramayanam One has not come across such a huge gathering for a religious discourse in Chennai in recent times. This was the thought that crossed one's mind visiting the Asthika Samajam at Venus Colony to hear the Harikatha Kalakshepam of young Vishakha Hari. On the final day, the audience braved the rain and listened to her, umbrellas and inverted chairs providing shelter. A smart looking young woman demurely draped in a nine yards silk sari, single plait adorned with jasmine, Vishakha narrates Tyagaraja Ramayana sitting in front of a small desk. Armed with reference papers, she occasionally uses the chiplakattai in her hand. Striking aspect Vishakha is blessed with a ringing voice and fluency of communication. Her rigorous training in Carnatic music is a striking aspect. Probably that is her strength as well as vulnerability. She draws energy through music. The audience promptly erupts into applause whenever she completes the rendition of a kriti. This tra

Vishaka Hari and Sri Venkatadri Mahatmiyam

ஸ்ரீமதி விஷாகா ஹரி உபன்யாஸம். ஸ்ரீ வெங்கடாத்ரி மஹாத்மியம். பேப்பர்களில் இந்த உபன்யாஸத்தைப் பற்றி அறிவிப்புகள் வந்தன. ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் மாலை 6-30 முதல் 8-30 வரை இருக்கும் என அறிவித்திருந்தனர். Most Mesmerising விஷாகா ஹரி என்றால் கூட்டம் அதிகமாக வரும் என்பது தெரிந்ததே; எனவே, அன்று மாலை 4-45க்கே 12-B பஸ் பிடித்து ஆஸ்திக சமாஜத்திற்கு 5-10க்கு போய்விட்டோம். 5-10க்கே 70% நிரம்பி விட்டது. வேதபாராயணம் முதலில் நடந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் விஷாகாவின் உபன்யாஸம் அன்று நடைபெறவில்லை. கூட்டம் கலைந்து போய்விட்டது. மறுநாள் ( 7-6-2008, சனிக்கிழமை ) மாலை 4-30க்கே கிளம்பினோம். அர்விந்த் காரில் எங்களை கொண்டு விட்டான். 5-30க்கு முன்பாகவே ஹால் பிதுங்கி வழிந்தது - என்ன ஒரு கூட்டம் ! வேத பாராயணத்திற்கு பிறகு, சரியாக 6-30க்கு உபன்யாஸம் துவங்கியது. Trademark 9-கஜம் மடிசார் பட்டு புடவை, வாய் நிறைய மலர்ந்த சிரிப்பு, கணீர் குரல் - விஷாகா ஹரி ஸ்ரீவெங்கடாத்ரி மஹாத்மிய உபன்யாஸத்தை ஆரம்பித்தார். எள்ளு போட்டால் எள்ளு விழும் நிசப்தத்

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில் Sri Parthasarathy Perumal Koil

SRI PARTHASARATHY PERUMAL KOIL, TIRUVALLIKKENI ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி நேற்று (08-மே-2008) மாலை 5-15 மணி அளவில், நானும் விஜயாவும் சும்மா "நடை பயில" (walking) புறப்பட்டோம். திடீரென எனக்கு "கோயிலுக்குப் போகலாமே" எனத் தோன்றியது. உடனடியாக 21L பஸ் பிடித்து, கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். பஸ் வந்த வழியே திரும்பி நடந்து - அடுத்த முறை விவேகானந்தர் இல்லத்திலேயே இறங்கிக் கொள்ளவேண்டும் - சுங்குவார் தெருமுனையில் உள்ள " கீழக் கோபுர நுழைவாயிலின் " வழியாக நடக்க ஆரம்பித்தோம். 5 நிமிட நடைக்குப் பிறகு, கோயில் குளம் தென்பட்டது - குளத்தில் தண்ணீர் இருக்கிறது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாங்கள் நுழையும்போது மாலை 6 மணி. பிரம்மோத்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. உத்சவ மூர்த்திக்கு மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருந்தனர். நிறையக் கூட்டம். Sri Parthasarathy Perumal கோயில் உள்ளே கூட்டம் இல்லை. பெருமாளுக்கு மிக அருகில் நின்று கொண்டு தரிசித்தோம். மனசுக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீவேதவல்லித் தாயாரையும் தரிசித்து, ஆண்டாள், யோக

Srimad Bhagavad Gita Ch 6 Sloka 40

அத்தியாயம் 6 ஸ்லோகம் 40 ஸ்ரீ பகவானுவாச பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி பார்த்தா, இவ்வுலகில் எல்லாருக்கும் நன்மையே செய்பவன் எவனும் கேடு அடைவதில்லை. இம்மையிலும், மறுமையிலும் அவனுக்கு அழிவென்பதே இல்லை. நலம் செய்யும் யாருமே நலிவுறுதில்லை This sloka was discussed on 20 Feb 2008 by Sri Velukkudi Krishnan rajappa 1020 on 20-2-2008

துணையெழுத்து S. Ramakrishnan

துணையெழுத்து S. Ramakrishnan Thunaiezuththu திரு எஸ் ராமகிருஷ்ணனின் இன்னொரு அருமையான கட்டுரைத் தொகுப்பு. தான் சந்தித்த, பேசிய, பார்த்த மனிதர்களை, இடங்களைப் பற்றிய ஆசிரியரின் மன எண்ணங்கள். "வாழ்வின் கசப்பும், தித்திப்பும் நாக்கில் மறுமுறையும் தோன்றி மறைந்தது," என ஆசிரியர் குறிப்பிடுவது மிகவும் பொருந்துகிறது. சுமார் 30-35 கட்டுரைகள் உள்ளன - ஒவ்வொன்றும் ஒரு புதிய, வித்தியாசமான அனுபவத்தை படிப்பவர்களுக்குத் தருகிறது. நெஞ்சைத் தொடுகின்றன. மிகவும் அருமையாக உள்ளது. Ramakrishnan எழுதிய "தேசாந்திரி" Desandhiri இங்கே பார்க்கவும். ராஜப்பா 08-45 12-2-2008

ஸுந்தர காண்டம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளைப் பற்றி (Sri Velukkudi Krishnan)ஏற்கனவே எழுதியுள்ளேன், தினமும் அவர் சொல்லும் கீதை உபன்யாஸத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். ( இங்கே படிக்கவும்). ஸ்ரீ வேளுக்குடி அவர்கள் "ஸுந்தர காண்டம்" பற்றி ஒரு உபன்யாஸம் செய்துள்ளார். VCD (2) விலை ரூ. 150.00 DVD ரூ. 250.00. விசிடியை 2008 ஜனவரி 25-ஆம் தேதியன்று கிரியில் (Giri Traders, Mylapore) வாங்கினேன். நேற்று (8-2-2008) வெள்ளிக்கிழமை இதைக் கேட்டோம். இரண்டு விசிடிக்களும் சேர்த்து சுமார் இரண்டு மணி 30 நிமிஷங்கள் ஓடுகின்றன. வேளுக்குடியை (Velukkudi Krishnan) பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது? அதே கம்பீர, கணீர் குரல், தங்கு தடையற்ற இனிய தமிழ் ஓட்டம், எல்லாருக்கும் புரியும்படியான எளிய சொற்கள். வால்மீகியும், கம்பரும், ஆழ்வார்களும் மிக சரளமாக வந்து போகிறார்கள். மிக அற்புதமாக உள்ளது. ஸுந்தர காண்டத்தை ஸ்ரீமதி விஷாகா ஹரி (Srimathy Vishakha Hari) யின் குரலில், இன்னிசையில் ஏற்கனவே கேட்டுள்ளோம். ( இங்கே ) இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொறுத்தவரையில், விஷாகா ஹரி இன்னிசைத் தேன். வேளுக்குடி ஸ்லோக மஹாச

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் - பகவத் கீதை Sri Velukkudi krishnan

சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு சென்றிருந்தோம். அங்கு இரண்டு பெரிய போஸ்டர்களை பார்த்தோம், படித்தோம். யாரோ ஒரு "வேளுக்குடி கிருஷ்ணன்" (Sri Velukkudi Krishnan) என்பவர் தினமும் பொதிகை டிவியில் காலை 6-30 முதல், 6-45 வரை பகவத் கீதை (Bhagavad Gita) உபன்யாசம் செய்ய இருக்கிறார் எனப் படித்தோம். அப்போது இந்த ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. காலையில் எழுந்து ஒரு நாள் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்துக் கொண்டோம். 2007, ஜனவரி 18, வியாழக்கிழமையும் வந்தது. 6-15க்கு எழுந்துகொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டோம்; 6-30 ஆயிற்று. வேளுக்குடி வந்தார். கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். என்ன ஒரு கம்பீரமான குரல்! தெளிவான நடை. இனிய, எளிய தமிழ் தங்குதடையின்றி நீரோட்டமாக ஓடி வருகிறது. மேற்கோள் காட்ட பலப்பல பாசுரங்கள், ஸ்லோகங்கள். மகுடி கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அது போன்று நானும், விஜயாவும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனின் (Velukkudi Krishnan) பரம ரசிகர

ஸுந்தர காண்டம் Vishakha Hari

"கண்டேன் ஸீதையை" ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் ஸுந்தர காண்டம் பிரசித்தி பெற்றது. ஸ்ரீராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மைப் பக்தியும் வாய்க்கப் பெற்றுள்ள ஹநுமானின் வீரச்செயல்கள் இக்காண்டத்துள் மிக விரித்துக் கூறப்பட்டுள்ளன். மொத்தம் 68 ஸர்க்கங்கள் கொண்டது. ஹநுமான் சமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்கு போனதிலிருந்து ஆரம்பிக்கிறது. மஹேந்திர பர்வதத்திலிருந்து கிளம்பி, மைநாக பர்வதத்தை தாண்டி, அரக்கி ஸூரஸையின் வாயில் நுழைந்து புறப்பட்டது, அரக்கி ஸிம்ஹிகையை அழித்து லங்கை சென்றது - அங்கு ஸீதையைத் தேடியது, அசோக வனத்திற்கு சென்றது, அங்கு ஹநுமான் ஸீதையைக் கண்டது, ஸீதையின் கஷ்டத்தைப் பார்த்து துக்கம் கொண்டது, பின்பு ஹநுமான் ஸ்ரீராம காவியத்தை ஆரம்பத்திலிருந்து பாடியது, ஸ்ரீராமனுடைய கணையாழியை ஸீதையிடம் அளித்தது, ஸீதை தன்னுடைய சூடாமணியை ஸ்ரீராமருக்குக் கொடுத்தது, ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தது, நிறைய அரக்கர்களை அழித்துக் கொன்றது, ராவணன் சபைக்குச் சென்று அவனுக்கு உபதேசம் செய்தது, ஆஞ்சநேயரின் வாலில் அரக்கர்கள் தீ வைத்தது, அந்த தீயினிலாயே லங்கையை அழித்தது, பின்னர் ராமனிடம் திரும்பி வந்து "